டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முகநூலின் லேசோ செயலி வந்துடுச்சுங்கோ... இதிலும் ஆடலாம், பாடலாம் வீடியோவா போடலாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: புதிய வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் விதமாக சமூக ஊடகமான முகநூல் டிக்டாக் போலவே வீடியோக்கள், டப்ஸ்மாஸ்களை பதிவேற்றம் செய்யும் லேசோ ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.

பாட்டு,டயலாக், ஸ்டண்ட், வித்தியாசமான திறமை என பலவற்றை 15 நிமிட வீடியோக்களாக டிக்டாக்கில் பதிவிடுவதை இளைய தலைமுறை முதல் பெரியவர்கள் வரை விரும்பி செய்கின்றனர். அண்மைக் காலமாக மிகப்பெரிய சமூக ஊடகமான முகநூல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே ஏற்கனவே இருந்த வாடிக்கையாளர்களை கவரவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் திட்டமிட்ட முகநூல் நிறுவனம் டிக்டாக்கிற்கு போட்டியாக லேசோ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

Facebook launched lasso app

லேசோவில் பயனாளர்கள் தங்களின் நடனம், இசைக்கு ஏற்றாற் போல வாயசைப்பது, டப்ஸ்மாஷ் என டிக்டாக்கில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் செய்ய முடியும். துணுக்கு வீடியோக்களையும் பயனாளர்கள் இதில் பதிவிட முடியும். ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் போன்களில் இந்த செயலியை பயன்படுத்த முடியும்.
முகநூலை பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் லேசோ செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக அக்டோபரில் முகநூல் நிறுவனம் அறிவித்தது.

2014ம் ஆண்டில் முகநூலை பயன்படுத்தியவர்களில் பாதிக்கும் குறைவான டீனேஜ் இளைஞர்களே 2018ல் முகநூலை பயன்படுத்துகின்றனர். அதாவது 71 சதவிகிதம் பேர் முகநூல் வாடிக்கையாளர்கள் நகைச்சுவையான வீடியோக்கள், சிறிய வீடியோக்களை

எங்க அத்தையை அம்முன்னு கூப்பிடுவாங்க.. கோமளவல்லி கிடையாது.. தீபா திடுக் தகவல்! எங்க அத்தையை அம்முன்னு கூப்பிடுவாங்க.. கோமளவல்லி கிடையாது.. தீபா திடுக் தகவல்!

புதிய லேசோ ஆப் நகைச்சுவை ஏற்படுத்தும் சிறிய வீடியோக்களை பதிவு செய்து அவற்றை செயலியில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. புதிய செயலி மூலம் ஃபேஸ்புக் புதிய வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் அறிமுகமாகி இருக்கிறது.

லேசோ ஆப் கொண்டு பாடல்கள் மற்றும் வீடியோக்களுக்கு லிப்-சின்க் செய்யும் வசிதயும் வழங்கப்படுகிறது. வைன்ஸ் போன்று செயலியில் சிறிய வீடியோக்களையும் பதிவு செய்யலாம். ஐ.ஓ.எஸ். மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் இந்த செயலி கிடைக்கிறது.

லேசோ செயலியை இன்ஸ்டாகிராம் மூலம் சைன்-இன் செய்தோ அல்லது ஃபேஸ்புக் மூலம் புதிய அக்கவுன்ட் ஒன்றை உருவாக்கியோ பயன்படுத்திக் கொள்ளலாம். செயலியை பயன்படுத்த ப்ரோஃபைல் பக்கம், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பயன்படுத்த செயலிக்கு அனுமதி வழங்க வேண்டும். ஹேஷ்டேக்குகள் மேல் பக்கத்தில் எப்போதும் இருக்கும், தேவைக்கு ஏற்ப டேகுகள் மூலம் எளிமையான தேடுதல் செய்யும் வசதியும் உள்ளது.

விரைவில் லேசோ வீடியோக்களில் ஃபேஸ்புக் ஸ்டோரி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் உள்ள வீடியோக்களை பயன்படுத்தும் வசதி விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலியில் உங்களது ப்ரோஃபைலை பிரைவேட் ஆக வைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

லேசோ 2 ஆண்டுகள் தாமதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீன நிறுவனம் 2016லேயே டிக்டாக் செயலியை அறிமுகம் செய்தது அது இப்போது இளைஞர்கள் மத்தியில் சக்கை போடு போடுகிறது. முகநூல் அறிமுகம் செய்யப்பட்ட போது என்ன எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவிற்கான எதிர்பார்ப்பு லேசோ செயலிக்கும் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

லேசோ செயலியை முகநூல் நிறுவனம் தங்கள் இணையதள பக்கத்தில் முறையாக அறிவிக்கவில்லை. முகநூலின் மேலாளர் ஆன்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லேசோ செயலி அறிமுகம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

English summary
Facebook has quietly released an app called Lasso that lets users create fun, short videos designed to compete with TikTok, the viral 15-second video app that recently merged with Musical.ly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X