டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜாமியா துப்பாக்கி சூடு.. குற்றவாளி பேஸ்புக் கணக்கு முடக்கம்.. ஆதரவு பதிவுகளும் நீக்கப்படும்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக, டெல்லி, ஜாமியா பல்கலைக்கழகத்தில் இன்று திரளான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இளைஞர் ஒருவர் மாணவர்களை நோக்கி நாட்டுத் துப்பாக்கியால் திடீரென சுட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Facebook removes Jamia shooters account

ஜாமியா பல்கலைக்கழக மாணவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியது, ராம் கோபால் சர்மா என்ற 19 வயது இளைஞர். அதற்கு முன்பாக அவர் ஃபேஸ்புக்கில் இந்த சம்பவம் தொடர்பாக லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அப்போது ஜாமியா பல்கலைக்கழகம் அருகே அவர் நடந்து செல்லும் காட்சிகள் போன்றவை வீடியோவாக வெளியிட்டார். இந்த நிலையில்தான் அவரது பேஸ்புக் கணக்கை இன்று மாலை 5.30 மணி அளவில் பேஸ்புக் நிர்வாகிகள் முடக்கியுள்ளனர்.

வன்முறையை தூண்டக்கூடிய சம்பவத்திற்கு பேஸ்புக்கில் இடம் கிடையாது என்று அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தை புகழ்ந்து கருத்து தெரிவிப்போர், அவரது ஆதரவாளர் போன்றோரும் அடையாளம் காணப்பட்டு அது போன்ற கருத்துக்கள் பேஸ்புக்கிலிருந்து நீக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜாமியா மாணவர் மீது துப்பாக்கி சூடு.. குற்றவாளி மீது பாய்ந்தது கொலை முயற்சி வழக்குஜாமியா மாணவர் மீது துப்பாக்கி சூடு.. குற்றவாளி மீது பாய்ந்தது கொலை முயற்சி வழக்கு

இதனிடையே துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான மாணவர் பாரூக் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் அவரது கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது ரத்தம் வெளியேறி இருந்தது. துப்பாக்கி சூடு நடத்திய ராம்கோபால் வர்மா மீது கொலை முயற்சி வழக்கு பாய்ந்துள்ளது.

English summary
Alarmed at the popularity and convergence of anti-social elements on Jamia shooter's Facebook timeline t was removed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X