டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உண்மை இல்லை, இரக்கமும் இல்லை.. பிரதமர் மோடி, வேளாண் அமைச்சர் தோமருக்கு விவசாயிகள் சங்கம் கடிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர தாமோதர் ஆகியோர் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்றும் நன்மையே நடக்கும் என்று கடிதம் அனுப்பி உள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள விவசாய சங்கங்கள், இருவரின் பேச்சிலும் உண்மை இல்லை. விவசாயிகள் மீது அரசுக்கு ஒரு சதவீதம் கூட இரக்கம் இல்லை என்றும் கூறியுள்ளன.

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு எட்டு பக்க திறந்த கடிதம் எழுதினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி அந்தக் கடிதத்தைப் படிக்குமாறும் பகிருமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி, விவசாய அமைச்சர் தோமர் ஆகிய இருவரின் பேச்சுக்களுமே "உண்மைக்கு புறம்பானவை. விவசாயிகள் மீது ஒரு சதவீதம் கூட கருணை இல்லை என்று தெரிவித்துள்ளது.

இரக்கம் இல்லை

இரக்கம் இல்லை

பிரதமர் மோடி மற்றும் விவசாய அமைச்சர் நரேந்திர தோமருக்கு எழுதிய கடிதத்தில், நீங்கள் கூறிய அனைத்தும் உண்மைக்கு புறம்பானது" என்பதில் சந்தேகமில்லை. "விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பதாக தோற்றத்தை உருவாக்கி கொண்டு , விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கடந்த இரண்டு நாட்களில் அவர்களின் எதிர்ப்பு ஆகியவற்றின் மீது நீங்கள் நடத்திய தாக்குதல் மூலம் விவசாயிகள் மீது உங்களுக்கு இரக்கமே இல்லை என்பதைக் காட்டுகிறது

நோக்கமே மாறுகிறது

நோக்கமே மாறுகிறது

இதை சொல்லும் நாங்கள் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. நீங்கள் விவசாயிகளின் குறைகளைத் தீர்ப்பதற்கான உங்கள் நோக்கத்தை மாற்றி உள்ளீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நிர்பந்தம்

நிர்பந்தம்

கடந்த ஆறு மாதங்களாக விவசாயிகள் நடத்தி வரும் அமைதியான போராட்டங்கள் குறித்து விவசாயிகளிடமிருந்தும், விவசாயச் சட்டங்களிடமிருந்தும் அரசாங்கத்தின் கூற்றுக்கள் மக்களிடையே அவநம்பிக்கையை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இந்த காரணத்தினாலேயே, உங்கள் திறந்த கடிதத்திற்கு பதிலளிக்க நாங்கள் இப்போது நிர்பந்திக்கப்படுகிறோம், இதன்மூலம் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் நீங்கள் அதைப் பற்றி சிந்திக்க முடியும்" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி பேச்சு

மத்திய பிரதேச விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் போது, போராடும் விவசாயிகள் எதிர்க்கட்சிகளால் தவறாக வழிநடத்தப்படுவதாகவும், இந்த சட்டங்கள் பல்வேறு குழுக்களால் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் உண்மையில் இது தவறான தகவல். , பிரதமர் தவறான அனுமானத்தில் இத்தகைய தகவலை வெளியிட்டிருக்கிறார் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள்

விவசாயிகள்

மேலும் கடிதத்தில் ஜூன் மாதத்தில் விவசாயிகளின் போராட்டம் தொடங்கியது. அரசியல் கட்சிகள் விவசாயிகளின் எதிர்ப்பின் காரணமாக தங்கள் நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன . அப்போது மோடி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்த அகாலிதளம் சட்டத்துக்கு ஆதரவு அளித்தது. ஆனால் விவசாயிகளின் கிளர்ச்சி காரணமாக அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டன. பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் ஆரம்பத்தில் எங்களை எதிர்த்தது. ஆனால் எங்கள் போராட்டம் பரவியதும் அதுவும் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

மாற மாட்டோம்

மாற மாட்டோம்

இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதற்கு காரணங்கள் இருக்கலாம், ஆனால் விவசாயிகள் அப்படிப்பட்ட நோக்கத்தில் செயல்படவில்லை. எங்களை பொறுத்தவரை நரேந்திர மோடி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான். விவசாயிகள் அரசியல் நோக்கங்களுக்காக பேசும் வார்த்தைகளால் மாற மாட்டார்கள்" என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

English summary
Factless talks, zero empathy with us: Farmers' leaders Responding to statements of PM Narendra Modi and agriculture minister Narendra Tomar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X