டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய அரசியல் வரலாற்றில் குறைந்த நாட்கள் முதல்வர்கள் பட்டியலில் இடம்பிடித்த தேவேந்திர பட்னாவிஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய அரசியல் வரலாற்றில் மிக குறைந்த நாட்கள் முதல்வர் பதவி வகித்தவர்கள் பட்டியலில் தேவேந்திர பட்னாவிஸ் இணைந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சனிக்கிழமையன்று பதவியேற்ற பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை நாளை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாது என்பதால் இன்றே முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் பட்னாவிஸ்.

Fadnavis also join with shortest-serving CMs list

இந்திய அரசியல் வரலாற்றில் இதேபோல் குறைந்த நாட்கள் முதல்வர் பதவி வகித்தவர்கள் உண்டு. இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்.

உத்தரப்பிரதேசத்தின் ஜெகதாம்பிகா பால் (1998) 3 நாட்கள் முதல்வராக இருந்தார். எடியூரப்பா கடந்த ஆண்டு கர்நாடகா முதல்வராக இருந்த போது 3 நாட்கள் மட்டுமே முதல்வராக பதவி வகித்தார்.

1990-ல் ஹரியானாவில் சவுதாலா 6 நாட்கள், 2000-ம் ஆண்டில் பீகாரில் நிதிஷ்குமார் 8 நாட்கள்; 2007-ல் எடியூரப்பா 8 நாட்கள் மட்டுமே முதல்வர் பதவி வகித்தனர்.

தற்போது மகாராஷ்டிரா மாநில முதல்வராக 4 நாட்கள் மட்டுமே பட்னாவிஸ் பதவி வகித்த நிலையில் ராஜினாமா செய்து இப்பட்டியலில் இணைந்துள்ளார்.

English summary
Now BJP's Devendra Fadnavis also joined with the shortest-serving CMs list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X