For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா: ராகுலும் பிரியங்காவும் 144 தடை உத்தரவை மீறியதாக வைரலாகும் வீடியோ- உண்மை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமல்படுத்தப்பட்டிருக்கிற தடை உத்தரவை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் மீறுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுனின் ஒருபகுதியாக இன்று இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அனைத்துவிட்டு அகல் விளக்குகள், டார்ச் லைட்டுகளை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.

Fack news: Rahul, Priyanka Gandhis old video shared with coronavirus issue

சமூக வலைதளங்களில் கொரோனா தொடர்பான மீம்ஸ்கள், கட்டுரைகள், வதந்திகள் அனைத்தும் உக்கிரமாக வலம் வருகின்றன. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்களுடன் நெருக்கம் காட்டுகின்றனர் என்ற வாசகங்களுடன் ஒரு வீடியோவும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த வீடியோ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது. நாடு முழுவதும் சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வந்தன. உத்தரப்பிரதேசத்தில் மிகப் பெரும் வன்முறை வெடித்து துப்பாக்கிச் சூடுகளில் பலர் உயிரிழந்திருந்தனர்.

Recommended Video

    விளக்கு ஏற்றுவதன் பின்னணியில் அறிவியல் காரணம் இல்லை

    அப்போது உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகருக்குள் நுழைய ராகுல் காந்திக்கும் பிரியங்காவுக்கும் மாநில அரசு தடை விதித்தது. அப்போது இருவரும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோவைத்தான் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவை ராகுல் மீறிவிட்டார் என்கிற தலைப்பில் பொய் செய்தியாக பரப்பி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

    English summary
    A old video clip of Congress leaders Rahul Gandhi, Priyanka Gandhi's car being stopped by a policeman went viral on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X