For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனைத்து ஹோட்டல்களையும் அக்டோபர் 15-வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மையா?

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் அனைத்து ஹோட்டல்களையும் அக்டோபர் 15-ந் தேதி வரை மூட வேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

Recommended Video

    Fake News Buster | அனைத்து ஹோட்டல்களையும் அக்டோபர் 15-வரை மூட உத்தரவு செய்தி உண்மையா?

    கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது 3-வது வாரமாக லாக்டவுன் நடைமுறையில் இருந்து வருகிறது.

    Fake: Tourism Ministry has not ordered closure of all hotels till October 15 2020

    இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் பெயரில் ஒரு சுற்றறிக்கை ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில், கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் அக்டோபர் 15-ந் தேதி வரை அனைத்து ஹோட்டல்களையும் மூட உத்தரவிடப்பட்டிருப்பதாக தகவல் இடம்பெற்றுள்ளது.

    மேலும் இதனை மீறினால் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், ரிசார்ட்டுகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலாத்துறை அமைச்சகம் இப்படியான ஒரு சுற்றறிக்கையை வெளியிடவில்லை எனபது தெரியவந்துள்ளது.

    இது ஒரு போலியான பொய்யான செய்தியாகும். லாக்டவுன் தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதில் மதவழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்களை மே 15-ந் தேதி வரை மூடலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் ஹோட்டல்களை மூடுவது தொடர்பாக எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை.

    English summary
    There is a message in circulation claiming that hotels and restaurants will remain closed until October 15 2020.This circular is bogus and the Tourism Ministry has issued no such order.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X