டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் 5 நாள் தளர்வு.. அப்புறம் 1 மாதத்திற்கு லாக்டவுன்.. WHO பெயரில் சுற்றும் மெசேஜ் ஃபேக்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் லாக்டவுன் நீடிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்று மறுக்கப்பட்டுள்ளது.

"ஆபத்தான வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான WHO லாக்டவுன் காலங்களின் செயல்முறை" என்ற தலைப்பில் ஒரு மெசேஜ் சுற்றி வருகிறது.

Fake: WHO has not issued any protocols and procedures on lockdown in India

ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 19 வரை, லாக்டவுன் விதிகளில் இந்தியாவில் தளர்வு இருக்கும் என்று அது கூறுகிறது. ஏப்ரல் 20 முதல் மே 18 வரை மற்றொரு லாக்டவுன் இந்தியாவில் அறிமுகமாகும் என்றும், கொரோனா வைரஸ் விகிதம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டால்தான், லாக்டவுன் திரும்ப பெறப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இறுதி லாக்டவுன் மே 25 முதல் ஜூன் 10 வரை இருக்கும் என்று சுற்றறிக்கை கூறுகிறது. ஆனால், WHO தென்கிழக்கு ஆசிய பிரிவு அத்தகைய சுற்றறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

WHO நெறிமுறை என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை. லாக்டவுனுக்கான எந்தவொரு நெறிமுறைகளும் WHOல் இல்லை என்று அது கூறியுள்ளது.

Recommended Video

    5ஜி மூலம் கொரோனா பரவுகிறதா? உண்மை என்ன?

    மக்களை குழப்பத்தில் வைத்திருக்க வாட்ஸ்அப் வதந்திகள் அதிகரித்து வருகின்றன. எனவே மக்கள் இதுபோன்ற வதந்திகளிடமிருந்து தப்பிக்க உஷாராக இருத்தல் அவசியமாகும்.

    English summary
    A circular attributed to the World Health Organisation has been doing the rounds in which the protocols or procedures for the lockdown is being prescribed. The circular it titled, " WHO protocol and procedure of lockdown periods for controlling the most dangerous virus."
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X