For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்கள் ஊதியம் பிடிக்கப்படுகிறதா? உண்மைதான் என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்கள் ஊதியத்தை அரசே பிடித்துக் கொள்ளும் என்கிற தகவலில் உண்மை எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு நிவாரண நிதி பெற்று வருகிறது. பிரதமர் நிவாரண நிதிக்காக நாடு முழுவதும் தொழிலதிபர்கள், அரசு நிறுவனங்கள் நிதி வழங்கி வருகின்றன.

False: Salaries of govt employees not being remitted into PM Cares Fund automatically

இந்த நிலையில் அரசு ஊழியர்களின் 5 நாள் ஊதியம் பிடிக்கப்பட்டு அது பிரதமர் நிவாரண நிதியில் சேர்க்கப்படும் என ஒரு சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சுற்றறிக்கைதான் அரசு ஊழியர்களிடையே பெரும் விவாதப் பொருளாக உள்ளது. ஆனால் உண்மையில் அப்படியான எந்த ஒரு சுற்றறிக்கை எதுவும் அரசு சார்பில் வெளியிடப்படவில்லை என தெரியவந்துள்ளது.

ஏனெனில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான நிதிக்கு அனைவரும் தாமாக முன்வந்து நிதி உதவி அளிக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் வேண்டுகோள். இது தொடர்பாக நமது ஒன் இந்தியாவிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள், அரசு ஊழியர்களின் ஊதியம் பிடிக்கப்படும் என்பது தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

Recommended Video

    5ஜி மூலம் கொரோனா பரவுகிறதா? உண்மை என்ன?

    ஆகையால் இது தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அப்படி ஒரு சுற்றறிக்கை என்பதே பொய்யானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    There is a notification doing the rounds which says that the salaries of employees working in the health ministry shall be remitted into the PM Cares Fund.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X