டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுவரை ரூ.1 கோடி.. இன்னும் வரும்.. புல்வாமாவில் பலியான வீரர்களின் குடும்பத்திற்கு வரும் நிவாரணம்

புல்வாமா தாக்குதலில் பலியான 40 பேரின் குடும்பங்களுக்கு இதுவரை மொத்தம் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: புல்வாமா தாக்குதலில் பலியான 40 பேரின் குடும்பங்களுக்கு இதுவரை மொத்தம் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

சில நாட்களுக்கு முன் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக பலியானார்கள். இந்த தற்கொலை படை தாக்குதல் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த தாக்குதல்களில் மிக மோசமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு தற்போது நிவாரண நிதி வழங்கப்பட்டு இருக்கிறது.

வேலூர் - பெங்களூர் பஸ்சில் ஹாயாக வருவது.. பைக்குகளை அபேஸ் செய்து பறப்பது.. பலே திருடர்கள் கைது வேலூர் - பெங்களூர் பஸ்சில் ஹாயாக வருவது.. பைக்குகளை அபேஸ் செய்து பறப்பது.. பலே திருடர்கள் கைது

எவ்வளவு மொத்தம்

எவ்வளவு மொத்தம்

இந்த 40 குடும்பங்களுக்கு மொத்தம் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்பட்டு இருக்கிறது. 40 குடும்பங்களுக்கு இந்த தொகை பிரித்து அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அளிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு சுமார் 2.50 லட்ச ரூபாய் வரை கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

எப்படி வந்தது

எப்படி வந்தது

இதில் மத்திய அரசு மொத்தம் 40 குடும்பங்களுக்கு மொத்தமாக 35 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது. 21.50 லட்சம் ரூபாய் ரிஸ்க் பண்ட் மூலம் வந்துள்ளது. 15 லட்சம் ரூபாய் பார்த்த கீ வீர் திட்டம் மூலம் வந்துள்ளது . ரூபாய் 30 லட்சம் ஸ்டேட் வங்கியின் ராணுவ வீரர்களுக்கான இன்சூரன்ஸ் மூலம் வந்துள்ளது.

மாநில அரசும் கொடுக்கும்

மாநில அரசும் கொடுக்கும்

இது இல்லாமல் பல்வேறு மாநில அரசுகள் தனியாக 1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணம் அளிப்பதாக கூறி உள்ளது. சில மாநில அரசுகள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதாகவும் கூறி இருக்கிறது. மேலும் கல்வி இலவசம் என்றும் சில அரசுகள் தெரிவித்து இருக்கிறது.

நல்ல மனிதர்கள்

நல்ல மனிதர்கள்

அதேபோல் சில தனியார் நிறுவனங்களும் இவர்களுக்கு பணம் அளித்து உள்ளது.சில முக்கியஸ்தர்கள் இவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் குழந்தைகளை படிக்க வைப்பதாக கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Families of Pulwama attack slain CRPF personnel paid nearly Rs 1-cr as the ex-gratia so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X