டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது - குடியரத்தலைவரிடம் எதிர்கட்சி எம்பிக்கள் மனு

வேளாண் மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. வேளாண் மசோதா சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜ்யசபா எதிர்க்

Google Oneindia Tamil News

டெல்லி: வேளாண் மசோதா சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார். வேளாண் மசோதா சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த மசோதாக்களை குடியரசுத்தலைவர் திரும்ப அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் கடந்த ஞாயிறன்று விவசாய விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்கள் விலை உத்தரவாத மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களின் மீது விவாதம் நடைபெற்றது.

Farm bills passed illegally says Ghulam Nabi Azad met President

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அவற்றை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.

ஆனால் அதை சபையின் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஏற்க மறுத்தார். இதனையடுத்து அவரது இருக்கையை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் சபை விதிமுறை புத்தகங்களை கிழித்தெறிந்தார். இதனால், அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்களை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு சஸ்பெண்ட் செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் பேரணியாக சென்றனர். இதற்கிடையே, வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கூடாது என கோரிக்கை விடுத்து குடியரசுத்தலைவரிடம் எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளனர்.

தமிழக பொதுத்துறை வங்கிகளில் தமிழக அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்தமிழக பொதுத்துறை வங்கிகளில் தமிழக அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை, எதிர்க்கட்சிகள் சார்பில் குலாம் நபி ஆசாத் இன்று சந்தித்து பேசிய போது, வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தார்.

குடியரசுத்தலைவரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத் வேளாண் மசோதா குறித்த எங்களின் கருத்தை கூறியதாக தெரிவித்தார். வேளாண் மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

வேளாண் மசோதா சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த மசோதாக்களை குடியரசுத்தலைவர் திரும்ப அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். டிவிஷன் முறை வாக்கெடுப்போ, குரல் வாக்கெடுப்போ நடத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.

English summary
Senior Congress leader and Rajya Sabha opposition leader Ghulam Nabi Azad has accused the agriculture bill of being passed illegally. The Agriculture Bill has been passed illegally. Therefore, the President has demanded that these bills be returned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X