டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது - விவசாயிகள் திட்டவட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது என விவசாயிகள் அறிவித்துள்ளனர். கொரோனா தீவிரமாக பரவி வருவதால் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று அரசு விடுத்துள்ள கோரிக்கையை விவசாயிகள் நிராகரித்

Google Oneindia Tamil News

டெல்லி: எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் போதுதான் போராட்டத்தை முடித்துக்கொள்வோம் என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கொரோனா தீவிரமாக பரவி வருவதால் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று அரசு விடுத்துள்ள கோரிக்கையை விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். டிராக்டர்களை குடியிருப்புகளாக மாற்றியும் தற்காலிக குடில்கள் அமைத்தும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Farm laws protest 143 days: Farmers refuse to end agitation at Delhi borders

கடுமையான குளிர், மழை, சுட்டெரிக்கும் வெயில் என மாறி மாறி இயற்கை தாக்கியும் விவசாயிகள் பின் வாங்காமல் போராடி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் 143வது நாளாக நீடித்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலையின் போது புதிய உச்சமாக 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லியில் 25,462 பேருக்கு புதிதாக கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.

கோவிட் 19 தொற்றுநோயின் இரண்டாவது அலையை குறிப்பிட்டு போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.

டெல்லியின் எல்லைகள் முதல் நாட்டின் பிற பகுதிகள் வரை விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் போதுதான் விவசாயிகளின் போராட்டங்கள் முடிவடையும் என்று போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் விவசாயிகள் சங்க அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர் தர்ஷன் பால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 கட்டுக்கடங்காத கொரோனா.. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை... மாவட்டத்திற்கு ஒரு கோவிட் மையம் கட்டுக்கடங்காத கொரோனா.. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை... மாவட்டத்திற்கு ஒரு கோவிட் மையம்

மத்திய அரசு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் சண்டையிடுவதற்கு பதிலாக கோவிட் நோய் மற்றும் அதிகரித்து வரும் தொற்றுநோயை அரசாங்கம் எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கெண்டார்.

மனிதநேயத்தின் அடிப்படையில், விவசாயிகளின் எதிர்ப்பு இடங்களில் அரசாங்கம் தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டும், அவர்களுக்கு கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தர்ஷன் பால் தெரிவித்துள்ளார்.

English summary
The farmers have stated categorically that we will end the struggle only when our demands are met. The farmers have rejected the government's demand that the farmers end their struggle as the corona is spreading rapidly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X