டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அய்யாக்கண்ணு அன்று கொளுத்தி போட்ட திரி.. இன்று பற்றி எரிகிறது டெல்லி!

அய்யாக்கண்ணு அன்று கொளுத்தி போட் திரிதான் காரணம்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்- வீடியோ

    டெல்லி: அன்று அய்யாக்கண்ணு கொளுத்தி போட்ட திரி இன்று நாடெங்கும் பற்றிக் கொண்டு எரிகிறது.

    பார்ப்பதற்கு எப்போதுமே அரைநிர்வாண கோலத்திலே போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று சுற்றி சுற்றி போராடி வரும் அய்யாக்கண்ணு ஒரு வக்கீல். பெரிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். 20 ஏக்கர் நிலம் இவருக்கு இருக்கிறது.

    இவ்வளவு இருந்தும் அய்யாக்கண்ணு ஏன் போராட வேண்டும்? அரைநிர்வாண கோலத்திற்கு அவசியம் என்ன? பசியும், பட்டினியுமாக இவர் ஏன் சாக வேண்டும்? பின்னணியை பார்ப்போம்.

    செங்கடலாக மாறிய டெல்லி.. தலைநகரில் திரண்ட 4 லட்சம் விவசாயிகள்.. மத்திய அரசு அதிர்ச்சி! செங்கடலாக மாறிய டெல்லி.. தலைநகரில் திரண்ட 4 லட்சம் விவசாயிகள்.. மத்திய அரசு அதிர்ச்சி!

    விவசாயிகள் சங்கம்

    விவசாயிகள் சங்கம்

    அடிப்படையிலேயே போராட்டம் குணம் நிறைந்தவர். 90களில் காவிரி வடகரை வாய்க்கால் விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு விவசாயிகள் சங்கத்தை ஆரம்பித்தார் இவர். அதன்பிறகுதான் தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தைத் துவங்கி, விவசாயிகளுக்காகப் போராட ஆரம்பித்தார்.

    டில்லிவாசிகள்

    டில்லிவாசிகள்

    தமிழகத்தில்தான் தன் கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தை ஆரம்பித்தார் அய்யாக்கண்ணு. பிறகுதான் தமிழ்நாட்டின் பிடியே டெல்லியில் இருக்கிறது என்பதை உணர்ந்து டெல்லியை போராட்ட இடமாக அறிவித்தார். டில்லி ரோட்டில் இவர் கால் படாத இடமே இல்லை. விதவிதமான போராட்டங்களை வெவ்வேறு வடிவங்களில் கையில் எடுத்து டில்லிவாசிகளே திரும்பி பார்க்க வைத்தார் அய்யாக்கண்ணு.

    தினந்தோறும் சந்திப்பு

    தினந்தோறும் சந்திப்பு

    தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு தலைவராக டில்லி சென்று அய்யாக்கண்ணுக்கு ஆதரவு தந்துவிட்டு வந்தார்கள். அவ்வளவு ஏன்? அங்கிருக்கும் நமது தமிழக எம்பிக்களே அய்யாக்கண்ணுவை தினந்தோறும் சந்தித்து பேசிக் கொண்டும் போராட்டத்துக்கு ஆதரவு தந்தும்தான் வந்தார்கள்.

    திரும்பி பார்த்தனர்

    திரும்பி பார்த்தனர்

    பிச்சையெடுப்பது, தரையில் உருள்வது, தூக்கில் தொங்குவது, முக்கால் நிர்வாணம், அரை நிர்வாணம், கடைசியில் முழு நிர்வாண போராட்டத்தையே நடத்தி டெல்லியை உலுக்கியது அய்யாக்கண்ணு டீம். தனி மனிதராக சில விவசாயிகளை வைத்துக் கொண்டு அய்யாக்கண்ணு தீவிரமாக போராடியதுதான் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை திரும்பிப் பார்க்க வைத்தது.

    உத்வேகம் போராட்டம்

    உத்வேகம் போராட்டம்

    வடமாநில குக்கிராமங்களில் பேச திராணியற்று குடிசைகளில் ஒளிந்து கிடந்தவர்கள் எல்லாம் அய்யாக்கண்ணுவின் அதிரடிகளை பார்த்து வீறு கொண்டு வெளியே வந்தார்கள். அகில இந்திய விவசாயிகளின் போராட்டம் அறிவிப்பு என்ற கட்டத்துக்கு தங்கள் உத்வேகத்தை நகர்த்தி கொண்டு வந்தார்கள். இத்தனைக்கும் அய்யாக்கண்ணுவுடன் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, கூட இருப்பது மிஞ்சி போனால் 50 பேர் மட்டும்தான்.

    நிலவுடைமையாளர்கள்

    நிலவுடைமையாளர்கள்

    விவசாயமே முதுகெலும்பாக தமிழ்நாட்டில் இருந்தும் அய்யாக்கண்ணுவுடன் ஏன் நம் டெல்டா விவசாயிகள் கரம் கோர்க்க முன்வரவில்லை என தெரியவில்லை. அதேபோல பிற விவசாய சங்கங்களும் அய்யாக்கண்ணுவுடன் இணைந்து செயல்படவும் வருவதில்லை. இதற்கு பெரும்பாலும் சொல்லப்படும் காரணம், நிலவுடைமையாளர்களின் பிரச்சனைகளைதான் அய்யாக்கண்ணு கையாள்கிறாரே தவிர, நிலத்தில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளர்களின் பிரச்சனையை அவர் பேசுவதில்லை என்று சொல்கிறார்கள்.

    ஒற்றை விவசாயி

    ஒற்றை விவசாயி

    எப்படியோ அருண்ஜெட்லி சந்திப்புவரை அதிர வைத்துவிட்டார் அய்யாக்கண்ணு. எவ்வளவோ முயற்சித்தும் அப்போதிருந்து இப்போது வரை பிரதமரை சந்திக்க மட்டும் அனுமதியின்றி தவிக்கிறார். என்றாலும், நாளைய விவசாயிகள் கண்ணீர் சிந்தக் கூடாது என்று இந்த ஒற்றை விவசாயி அன்று முன்னெடுத்த போராட்டம்தான் இன்று நாடு முழுவதும் கொளுந்து விட்டு எரிந்து வருகின்றது. என் விவசாய மக்களின் துயர் துடைக்காமல் நான் ஓய போவதில்லை என்று மார்தட்டி சொல்கிறார் 200 கிரிமினல் கேஸ்கள், 400க்கும் மேற்பட்ட குடும்ப வழக்குகளில் வாதாடி இருக்கும் வக்கீல் அய்யாக்கண்ணு.

    English summary
    Farmer Ayyakkannu is the basic reason for all the Agrarian struggle today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X