டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த நூற்றாண்டுக்கே தேவையான விவசாய மசோதா இது.. மோடி பெருமிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: 21-ம் நூற்றாண்டுக்கு வேளாண் மசோதாக்கள் மிக மிக முக்கியமானவை என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

பீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் பீகார் மாநிலத்தில் பல்வேறு நலத் திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார்.

Farmer bills need of 21st century, says PM Narendra Modi

இதன் ஒரு பகுதியாக பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்டங்கள்; 45 கிராமங்களுக்கான இண்டர்நெட் வசதி ஆகியவற்றை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:

வேளாண் மசோதாக்களை என்னுடைய அரசு தற்போது நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது. இந்த 21-ம் நூற்றாண்டுக்கு இந்த மசோதாக்கள் மிகவும் முக்கியமானவை.

வேளாண் மசோதாவை எதிர்த்தது ஏன்? எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் விளக்கம்.. ஓபிஆர் குறித்து பரபர பேச்சு வேளாண் மசோதாவை எதிர்த்தது ஏன்? எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் விளக்கம்.. ஓபிஆர் குறித்து பரபர பேச்சு

வேளாண் மசோதாக்கள் மூலம் தற்போது மண்டி நிர்வாக முறைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இத்தகைய மண்டிகள் நவீனமயமாக்கப்படும். வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நாட்டின் எந்த பகுதியிலும் விவசாயி தனது விளைபொருளை விற்பனை செய்ய முடியும்.

விவசாயிகளை இனி ஒரு குறிப்பிட்ட குழு கட்டுப்படுத்திக் கொண்டு இருக்காது. இனி விவசாயிகள் சுதந்திரமானவர்கள். விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை என்னுடைய அரசுதான் மிக அதிக அளவில் வழங்கியிருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

English summary
Prime Minister Narendra Modi on Monday said the Farmer bills need of 21st century.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X