டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்திய டெல்லியில் போராடும் விவசாயிகள் அரசு ஏற்பாடு செய்த டீ, சாப்பாடு ஆகியவற்றை ஏற்க மறுத்தனர். தாங்களே கொண்டு வந்த டீ, சாப்பாட்டை பங்கிட்டு சாப்பிட்டு ஆச்சரியப்பட வைத்தனர்.

மத்திய பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பல லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 8-வது நாளாக தொடர்ந்தது.

 Farmer Leaders Refuse Centre Lunch Offer at Delhi Meeting

ஏற்கனவே மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்த நிலையில் டெல்லியில் இன்று 30 விவசாய சங்க பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு! புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்தீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு! புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்

டெல்லி விக்யான் பவனில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையின் போது விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் மத்திய அரசின் உணவை ஏற்க விவசாயிகள் மறுத்துவிட்டனர்.

மேலும் தாங்களே கொண்டுவந்திருந்த உணவையே பங்கிட்டு சாப்பிட்டனர். சிலர் தரையில் அமர்ந்தும் சாப்பிட்டனர். பின்னர் மாலையில் விவசாயிகளுக்கு ஆம்புலன்சில் அவர்களது தரப்பில் இருந்தே டீ கொண்டு வந்து தரப்பட்டது. விவசாயிகளின் உன்னதமான இந்த அணுகுமுறை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

English summary
30 Farmer Leaders who participated talks Refused the Centre's Lunch Offer at Meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X