டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆமா.. இல்லை.. ரெண்டில் ஒன்னு சொல்லுங்க.. பேச்சுவார்த்தை தேவையில்லை.. அரசிடம் விவசாயிகள் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஆம் அல்லது இல்லை என்று மட்டும் சொல்லுங்கள், பேச்சுவார்த்தை தேவையில்லை என விவசாயிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தினர்.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் 5வது கட்டமாக இன்று பிற்பகலில் பேச்சுவார்த்தை துவங்கியது.

Farmer Leaders Sit on Silent Protest at Meeting, Want Repealing Laws

விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டம்...இன்று 5ம் கட்ட பேச்சுவார்த்தை.... முடிவு கிடைக்குமா!விவசாயிகள் போராட்டம்...இன்று 5ம் கட்ட பேச்சுவார்த்தை.... முடிவு கிடைக்குமா!

புதிய விவசாய சட்டங்களின் சர்ச்சைக்குரிய விதிகளை திருத்த ரெடி என அமைச்சர்கள் தெரிவித்தனர். ஆனால் இதை விவசாயிகள் ஏற்கவில்லை.
சட்டத்தை மொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Farmer Leaders Sit on Silent Protest at Meeting, Want Repealing Laws

40 விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும், அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டத்தை நிராகரித்துவிட்டனர். சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால், நாங்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் சில விவசாயிகள் மவுன விரதம் கடைபிடித்து பேச மறுத்தனர். "ஆம் அல்லது இல்லை என்று சொல்லுங்கள்.. பேச்சுவார்த்தை தேவையில்லை" என்று எழுதப்பட்ட பதாகைகளை சில விவசாயிகள் வைத்திருந்தார்கள்.

English summary
With 'Yes or No' Placards, Farmer Leaders Sit on Silent Protest at Meeting, Want Govt to Spell Out Position on Repealing Laws.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X