டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேளாண் சட்டத்தை திரும்ப பெற சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்.. விவசாயிகள் கோரிக்கை கடிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: வேளாண் சட்டத்தை திரும்ப பெற சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதியிருந்தனர். விவசாயிகள் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பஞ்சபா முதல்வர் அமரீந்தர் சிங்கை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த நிலையில் அந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லி சலோ எனும் போராட்டம் நடத்தப்படுகிறது.

Farmers demand special parliament session to repeal agri laws

கடந்த 7 நாட்களாக விவசாயிகள் ஆவேசத்துடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்துள்ளனர். மேலும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டர்களில் கும்பல் கும்பலாக வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் விவசாய சங்க பிரதிநிதிகள், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அப்போது சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து அவர்கள் திட்டமிட்டபடி இன்றைய தினம் (டிசம்பர் 3) பேச்சுவார்த்து நடத்துகிறார்கள்.

முன்னதாக வேளாண் சட்டத்தை திரும்ப பெற சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு விவசாயிகள் நேற்று கடிதம் எழுதியிருந்தனர்.

கனடா பிரதமரே விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிட்டார்.. நம்ம முதல்வர் எதுவுமே சொல்லலியே.. தமிழச்சி கேள்விகனடா பிரதமரே விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிட்டார்.. நம்ம முதல்வர் எதுவுமே சொல்லலியே.. தமிழச்சி கேள்வி

மேலும் விவசாயிகளின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் பிரிவிணை செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது போல் புதிய மின் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மாட்டோம் என கடிதம் வாயிலாக எழுதி தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை களைய நிபுணர்கள் குழுவை ஏற்படுத்துவதாக மத்திய அரசின் ஆலோசனையை விவசாயிகள் ஏற்கவில்லை. இதுபோன்ற புதிய குழுவை ஏற்படுவதால் எந்த பயனும் இல்லை. விவசாயிகள் இந்த அர்த்தமற்ற குழுவுடன் போராட தயாராக இல்லை என தெரிவித்தனர்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் வரும் காலங்களில் உச்சபட்ச நடவடிக்கைகளை எடுப்போம் என விவசாயிகள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பஞ்சபா முதல்வர் அமரீந்தர் சிங்கை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Farmers writes letter to Union Agriculture minister Narendra Singh Tomar demands to hold a special parliament session to repeal new farm laws.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X