டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகள் போராட்டத்தில் மனிதாபிமானச் செயல்கள்.. உதவி கரம் நீட்டும் தன்னார்வலர்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: போராடி வரும் விவசாயிகளுக்கு ஏராளமானோர் தேடி வந்து உதவி செய்யும் மனிதாபிமானம் சம்பவங்களால் போராட்டக்களமே நெகிழ்ச்சி அடைந்துள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து 70 நாட்களுக்கும் மேலாக விவசாயிகளும் விவசாய சங்க அமைப்புகள் என போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியின் எல்லைகளான சிங்கு, டிக்ரி, காசிப்பூர் ஆகிய இடங்களில் செப்டம்பர் மாதம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு இவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் சுமுக முடிவுகள் எட்டப்படவில்லை என்பதால் போராட்டம் தொடர்ந்து நிகழ்கிறது. இதற்காக தனி குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

இன்டர்நெட் சேவை

இன்டர்நெட் சேவை

எனினும் அதிகபடியான போலீஸ் கெடுபிடி, இன்டர்நெட் சேவை துண்டிப்பு, கடுமையான பனி, குளிர் என இருக்கும் போதிலும் தங்கள் போராட்டத்தை விவசாயிகள் கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தின்போது விவசாயிகளுக்கு பல தரப்பினர் உதவ முன் வருகிறார்கள்.

துணி துவைக்க

துணி துவைக்க

விவசாயிகளின் துணிகளை துவைக்க விளையாட்டு வீரர்கள் சலவை சேவைகளை வழங்கி வருகிறார்கள். கடுங்குளிரால் அவதிப்படும் விவசாயிகளுக்கு சீக்கிய அமைப்புகள் இலவச வாட்டர் ஹீட்டர்களை வழங்குகிறார்கள். அது போல் பலர் விவசாயிகளுக்கு சுத்தமான நீரை வழங்கி வருகிறார்கள்.

போராட்டம்

போராட்டம்

ஆங்காங்கே நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு சுகாதார வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தங்கள் சொந்த மண்ணின் பாரம்பரியம், பெருமை, வரலாறு குறித்து சக விவசாயிகளுக்கு போராட்டக்காரர்கள் பாடம் நடத்துகிறார்கள். இதன் மூலம் விவசாயிகள் எந்த வித ஒழுங்கீனமற்ற செயல்களிலும் ஈடுபடாமல் கட்டுப்பாட்டுடன் போராடுவது தெரியவருகிறது.

வடஇந்திய மக்கள்

வடஇந்திய மக்கள்

இந்த விவசாயிகள் தினந்தோறும் சமைத்து இல்லாத ஏழை எளிய மக்களுக்கும் உணவுகளை வழங்கி வருவதால் இவர்கள் நாளுக்கு நாள் மக்கள் மனதில் உயர்ந்து வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒரு தீர்வு கொடுக்காமல் மத்திய அரசு இருப்பதால் வடஇந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Farmers in their protest touches heart of the poor people by feeding them in humanitarian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X