டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகளுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டோம்.. பாஜக கொண்டு வந்த மசோதாவை எதிர்த்த கூட்டணி கட்சி

Google Oneindia Tamil News

டெல்லி: சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் பாடல் தங்களது கூட்டணி கட்சியான பாஜகவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் அரசு அறிமுகப்படுத்திய மூன்று விவசாய துறை தொடர்பான மசோதாக்களை கடுமையாக எதிர்த்து வெளிநடப்பு செய்த அவர், விவசாயிகளின் நலன்களுக்காக தங்கள் கட்சியால் எதையும் தியாகம் செய்ய முடியும் என்று கூறினார்.

விவசாயிகள் அமைப்புகள், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் வெளிப்படுத்தும் அனைத்து கோரிக்கைகளும் தீர்க்கப்படும் வரை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று பாஜகவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது. நாடாளுன்றத்தில் இந்த அமர்விலேயே விவசாயிகளின் கவலைகளுக்கு தீர்வு காணுமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய அரசு வேளாண் தொடர்பான 3 மசோதாக்களை திங்கள் கிழமை அன்று லோக்சபாவில் அறிமுகம் செய்தது. இதன்படி, விவசாயிகள் பொருட்கள் வர்த்தகம் மற்றும் வியாபார மசோதா, விவசாயிகளுக்கு அதிகாரம் மற்றும் பாதுகாப்பு மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை கொண்டுவரப்பட்டன. இதில் அத்தியாவசியப் பொருட்கள் மசோதா லோக்சபாவில் நிறைவேறியுள்ளது.

பலவீனமாக உடல்நிலை.. மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா இருப்பது உறுதிபலவீனமாக உடல்நிலை.. மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா இருப்பது உறுதி

நல்ல விலை கிடைக்கும இடத்தில்

நல்ல விலை கிடைக்கும இடத்தில்

தற்போது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மண்டிகள் மூலம்தான் விற்பனை செய்கிறார்கள். இந்த மசோதாக்கள் நிறைவேறியதன் மூலம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மண்டிகளைக் கடந்து தங்களுக்கு லாபமான விலையில் விற்கலாம். அதாவது விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கு விற்கலாம்.

யாக்கு விற்க வேண்டும்

யாக்கு விற்க வேண்டும்

இந்த மசோதாக்களை தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் .நரேந்திர சிங் தோமர், இந்த மசோதாவின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள், விவசாயப் பொருட்களின் தடையற்ற வர்த்தகத்துக்கு வழிவகுக்கும் என்றும், விவசாயிகள் தங்கள் விருப்பத்துக்கு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் என்றார்.

மாற்றியமைத்த மசோதா

மாற்றியமைத்த மசோதா

விவசாயிகளும், வர்த்தகர்களும் இடைத்தரகர்கள் தலையீடு இன்றி நேரடியாகவும் சுதந்திரமாக வியாபாரத்தில் ஈடுபடும் சூழலை இந்த மசோதா ஏற்படுத்தும். இதற்கான மின்னனு வர்த்தக கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் எந்த மாநில வியாபாரிகளுடனும் தடையின்றி வர்த்தகம் செய்ய முடியும் என்றார்.

 அகாலிதளம் கட்சி

அகாலிதளம் கட்சி

இந்நிலையில் இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. பஞ்சாப் மாநிலத்தில் எதிர்க்கட்சியான அகாலிதளம் கட்சியும் மசோதவை கடுமையாக எதிர்த்தது. அக்கட்சியின் எம்பி பாடல், லோக்சபாவில் அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார், முன்மொழியப்பட்ட சட்டம் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது என்று கூறினார்.

விவசாயிகளிடம் ஆலோசனை

விவசாயிகளிடம் ஆலோசனை

இந்த மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, அவர்கள் குறைந்தபட்சம் விவசாயிகளின் கட்சிகள் மற்றும் அவர்களது அமைப்பை கலந்தாலோசித்திருக்க வேண்டும். அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த விவகாரம் எடுத்துக் கொள்ளப்பட்டபோது எங்கள் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாடல் தனது கோரிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்" என்று பாடல் கூறினார் .

கொள்முதல் துறை பாதிப்பு

கொள்முதல் துறை பாதிப்பு

முன்மொழியப்பட்ட சட்டங்கள் குறித்த கவலைகளை வெளிப்படுத்திய அவர், இது முழு விவசாய துறையையும் கொள்முதல் முறையையும் பாதிக்கும் என்றார். ஒவ்வொரு ஆறு கிராமங்களிலும் தானிய சந்தை (மண்டி) இருப்பதால் இந்த அமைப்பு வலுவாகவும் திறமையாகவும் உள்ளது. எனவே வெறும் 25 நாட்களில் முழு கொள்முதல் நிறைவடையும்.

எதையும் செய்வோம்

எதையும் செய்வோம்

அரசு அறிமுகம் செய்ய உள்ள மீதமுள்ள இரண்டு மசோதாக்களை அகாலி தளம் எதிர்க்கும், அவை எங்கள் அரசியலின் மையத்தில் இருப்பதால் விவசாயிகளின் நலனுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக உள்ளோம். எங்கள் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாகவே நிற்கும் என்று பாடல் கூறினார்,

English summary
The Shiromani Akali Dal has been requesting the Centre not to introduce the three agriculture-related bills for the approval of Parliament until all reservations expressed by farmers' organisations, farmers and farm labourers are addressed, Mr Badal told news agency Press Trust of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X