டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஜன.26-ல் விவசாயிகளின் 1 லட்சம் டிராக்டர் பேரணி

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஜனவரி 26-ல் விவசாயிகள் 1 லட்சம் டிராக்டர் பேரணியை நடத்த உள்ளனர்.

விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் வாட்டும் குளிரிலும் 2 மாதங்களாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

Farmers leave from Punjab for Delhi to participate in tractor march on Jan. 26

புதிய விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். மேலும் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண 4 வல்லுநர்கள் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

Farmers leave from Punjab for Delhi to participate in tractor march on Jan. 26

ஆனால் இந்த 4 பேரும் விவசாய சட்டங்களை ஆதரிப்பவர்கள் என்பதால் இக்குழுவை ஏற்க முடியாது என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் விவசாயிகளின் அடுத்த கட்ட போராட்டமாக வரும் 26-ந் தேதி டெல்லியில் 1 லட்சம் டிராக்டர்கள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.

Farmers leave from Punjab for Delhi to participate in tractor march on Jan. 26

இதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏராளமான டிராக்டர்களில் விவசாயிகள் டெல்லி நோக்கி இன்று புறப்பட்டனர்.

English summary
Farmers are leaving from Punjab for Delhi to participate in One Lakh tractors march on Jan. 26.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X