டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம் விவசாயிகள் எப்படி துரோகிகளாக இருக்க முடியும் - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி

நம் விவசாயிகள் எப்படி துரோகிகளாக இருக்க முடியும். ஆனால் அவர்கள் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: நம் நாட்டின் விவசாயிகள் மகிழ்ச்சி அற்றவர்கள். 90 நாட்களுக்கும் மேலாக அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் டெல்லி அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நம் விவசாயிகள் எப்படி துரோகிகளாக இருக்க முடியும். ஆனால் அவர்கள் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

டெல்லி எல்லையில் 96வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடும், குளிர் மழையை பொருட்படுத்தாமல் 96 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

Farmers Not Anti National says CM Kejriwal In Meerut

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் பல எல்லைகளில் 3 மாதத்துக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஜனவரி 26ம் தேதியன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அந்த பேரணியின்போது பெரும் வன்முறை ஏற்பட்டது. மேலும் டெல்லியின் செங்கோட்டையில் போலீஸ் தடுப்பை மீறி நுழைந்த போராட்டக்காரர்கள் தங்களது அமைப்பு கொடியை ஏற்றினர்.

இதனிடையே மீரட்டில் நடைபெற்ற விவசாயிகள் மகா பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி செங்கோட்டை சம்பவம் மத்திய அரசின் சதி என்றும் செங்கோட்டை வன்முறையின் பின்னணியில் மத்திய அரசு உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

டெல்லி சாலைகளை தெரியாத விவசாயிகளை மத்திய அரசு தவறாக வழி நடத்தியது என்று கூறிய கெஜ்ரிவால், டெல்லி யூனியன் பிரதேசத்தின் முதல்வர் நான் என்பதால், விவசாயிகளின் டிராக்டர் பேரணி மேற்கொண்ட நாளில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

நம் நாட்டின் விவசாயிகள் மகிழ்ச்சி அற்றவர்கள். 90 நாட்களுக்கும் மேலாக அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் டெல்லி அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காலத்தில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு இது குறித்து எதுவும் செய்யவில்லை.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கூட சந்திக்காத அட்டூழியங்களை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்கொண்டனர். இப்போது போராட்டக்காரர்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நம் விவசாயிகள் எப்படி துரோகிகளாக இருக்க முடியும். ஆனால் அவர்கள் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் வேதனையுடன் பேசியுள்ளார் கெஜ்ரிவால்.

English summary
The farmers of our country are unhappy. Delhi Chief Minister Arvind Kejriwal has said that they have been fighting with their families near Delhi for more than 90 days. How can our farmers be traitors. But he also lamented that they are facing treason charges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X