டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை

லட்சக்கணக்கான விவசாயிகள் வெற்றிகரகமாக டெல்லியை அடைந்துவிட்டார்கள், அவர்களது தைரியத்துக்கும் துணிவுக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம். பிற்போக்குத்தனமான விவசாய கொள்கையை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்.

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாயிகள் விரோத புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான அடக்குறைகளைக் கைவிட வலியுறுத்தியும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதரக் கோரியும் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. போராடும் விவசாயிகள் அமைதியாக தங்கள் கோரிக்கையை வைக்க டெல்லி நோக்கி வந்த உங்களை தடுக்க முயன்ற மத்திய அரசின் நடைமுறையை பின் வாங்கச்செய்து இன்று ஒரு இடத்தில் போராட அனுமதி பெற்ற வலிமையை பாராட்டுகிறோம் என்றும் எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. சரத் பவார், தி.மு.க. பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. டி.ராஜா, ராஷ்ட்ரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மனோஜ் ஜா, சிபிஐ-எம்எல் கட்சியின் பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் திரு. தேபப்ரதா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. மனோஜ் பட்டாச்சாரியா ஆகிய எதிர்க்கட்சியினர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை!

Farmers protest in delhi govt forward to resolve the demands says Opposition party

இந்திய வேளாண்துறையை கார்பரேட் மயமாக்கும் வகையிலும், இந்திய விவசாயத்தை அழிக்கும் வகையில் புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாக விவசாய சங்கத்தினர், எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றனர்.

டெல்லி நோக்கி வடமாநில விவசாயிகள் போராட்டம் நடத்த லட்சக்கணக்கில் டெல்லி நோக்கி குவிந்து வருகின்றனர். அவர்களை அச்சுறுத்தி விரட்ட டெல்லி போலீஸார் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் விவசாயிகளுக்கு போராட இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான அடக்குறைகளைக் கைவிட வலியுறுத்தியும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதரக் கோரியும் திமுக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

இந்த கூட்டறிக்கையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, ராஷ்ட்ரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா, சிபிஐ-எம்எல் கட்சியின் பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேபப்ரதா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இரண்டுநாட்கள் நாடாளுமன்றம் முற்றுகைப் போராட்டத்தை நடத்த முறையாக விவசாயிகள் அனுமதி கோரினர். அதற்கு அனுமதி மறுத்தது மத்திய அரசு. டெல்லி எல்லை பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. போராடும் விவசாயிகளை தடுத்த காவல்துறையினர் தண்ணீரை பீச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கலைக்க முயற்சித்தனர்.

அடக்குமுறைகளை, மீறி தடுப்புகளை உடைத்துக்கொண்டு விவசாயிகள் முன்னேறினர். சாலையோரங்களில் சமைத்து சாப்பிட்டுக்கொண்டு போராட்த்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு பணிந்த காவல்துறையினர், அவர்களை வடக்கு டெல்லி புராரி பகுதியில், உள்ள நிரங்காரி மைதானத்தில் போராட்டத்தை தொடர அனுமதி வழங்கியுள்ளனர்.

விவசாயிகள் தங்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன் போராட்டம் நடத்துவதாகக் கூறியுள்ளனர். டெல்லி போராட்டத்தில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகளும் கலந்துகொள்ளப் போவதாக தற்போது அறிவித்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் இந்தப் போராட்டம் மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், வரும் டிசம்பர் 3ஆம் தேதி மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே போராடும் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். அந்த அறிக்கையில் "கடுமையான அடக்குமுறை, கண்ணீர் புகை குண்டு வீச்சு, பெரிய தீயணைப்பு குழாய்கள் மூலம் தண்ணீர் பீச்சியடிப்பு, சாலையில் தடை, போலீஸார் சாலைத்தடுப்புகள் அமைத்து விவசாயிகளுக்கு எதிராக நடத்திய அடக்குமுறை போரை தொடங்குவது போன்று உள்ளது.

லட்சக்கணக்கான விவசாயிகள் வெற்றிகரகமாக டெல்லியை அடைந்துவிட்டார்கள், அவர்களது தைரியத்துக்கும் துணிவுக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம். பிற்போக்குத்தனமான விவசாய கொள்கையை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்.

Farmers protest in delhi govt forward to resolve the demands says Opposition party

போராடும் விவசாயிகள் அமைதியாக தங்கள் கோரிக்கையை வைக்க டெல்லி நோக்கி வந்த உங்களை தடுக்க முயன்ற மத்திய அரசின் நடைமுறையை பின் வாங்கச்செய்து இன்று ஒரு இடத்தில் போராட அனுமதி பெற்ற வலிமையை பாராட்டுகிறோம்.

அதே நேரம் தற்போது கொடுக்கப்பட்டுள்ள மைதானம் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட இடமில்லாத வகையில் நெருக்கடியான ஒன்று. ஆகவே போராடும் விவசாயிகளுக்கு டெல்லி ராம்லீலா மைதானத்தை போன்ற பெரிய மைதானம் அல்லது ராம்லீலா மைதானத்தை ஒதுக்கி அவர்கள் அமைதியாக போராட வேண்டிய உணவு, தங்குமிடம் உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.

உணவுப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும், குறைந்தப்பட்ச ஆதார விலை நீக்கிய, இந்திய வேளாண் துறையை, உணவு வழங்குகிற விவசாயிகளை அழிக்கும் புதிய விவசாய கொள்கையை எதிர்க்கிறோம் என்பதை மீண்டும் பதிவு செய்கிறோம். அதே வேளையில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க மத்திய அரசு முன்வரவேண்டும் என்று தெரிவித்து கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

English summary
Opposition parties, including the DMK and the Communist Party, have called for an end to the crackdown on farmers fighting in the capital, Delhi, against new anti-farmer agrarian laws and for the provision of all necessary facilities. Opposition parties have also said they appreciate the strength of the federal government in backing the practice of trying to stop the struggling farmers from coming to Delhi to keep their demands quiet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X