டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்... டெல்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் தள்ளுமுள்ளு..!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களை கண்டித்து டெல்லியில் பேரணி நடத்தச் சென்ற விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சி இன்னும் ஓயவில்லை. தொடர்ந்து இந்த சட்டத்தை திரும்பப்பெறக்கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

Farmers rally halted in Delhi entrance

அதன் ஒரு பகுதியாக மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை வலிமையாக காட்டும் பொருட்டு டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடத்த திட்டமிட்டனர் விவசாயிகள். இந்நிலையில் இன்று அவர்களை டெல்லிக்குள் நுழைய அனுமதி மறுத்த போலீஸ் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்தது.

Farmers rally halted in Delhi entrance

இதனால் ஆவேசமைடைந்த விவசாயிகள் போலீஸாரின் தடுப்புக்கட்டைகளை தூக்கி ஆற்றுக்குள் வீசினர். தொடர்ந்து காவல்துறை தடையையும் மீறி முன்னேறிச் சென்றதால் அங்கு பெரும் கலகம் ஏற்பட்டது. மத்திய அரசுக்கு எதிராகவும், போலீஸார் நடவடிக்கையை கண்டித்தும் விவசாய பெருங்குடி மக்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

Farmers rally halted in Delhi entrance

சம்பு மற்றும் கர்னல் என்ற இரண்டு நுழைவு வாயில்களிலும் விவசாயிகள் திருப்பி அனுப்பட்டனர். இதனிடையே விவசாயிகள் மீதான காவல்துறையின் இந்த நடவடிக்கைகளு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

வேட்டியை மடித்துக்கொண்டு களம் இறங்கிய ஓபிஎஸ்.. வெள்ளம் பாதித்த பகுதிகளில் அதிரடி விசிட்!வேட்டியை மடித்துக்கொண்டு களம் இறங்கிய ஓபிஎஸ்.. வெள்ளம் பாதித்த பகுதிகளில் அதிரடி விசிட்!

English summary
Farmers rally halted in Delhi entrance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X