டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சில அரசியல்வாதிகள்தான் வன்முறையை தூண்டி விட்டனர்... அவங்க யாருனு தெரியும்... விவசாயிகள் பகீர்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி வன்முறைக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

அரசியல் கட்சியினர் சிலர் வேண்டுமென்றே வன்முறையை தூண்டி விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

farmers said some political parties of deliberately inciting delhi violence

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறி உள்ளது. சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும் தடுப்புகளை போலீசார் மீது எறிந்த விவசாயிகள் முன்னோக்கி சென்றதால் கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டது.

தீவிரமடைந்த விவசாயிகள் போராட்டம்.. பரவும் வதந்திகள்.. டெல்லியில் இணையதள சேவை துண்டிப்பு தீவிரமடைந்த விவசாயிகள் போராட்டம்.. பரவும் வதந்திகள்.. டெல்லியில் இணையதள சேவை துண்டிப்பு

போலீசார் தடியடி நடத்தினார்கள். டெல்லி முழுவதும் வன்முறைக்களமாக உள்ளது. டெல்லியில் உள்ள அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் விவசாயிகள் தடையை மீறி செல்கின்றனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த வன்முறைக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

farmers said some political parties of deliberately inciting delhi violence

இது தொடர்பாக விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிக்கிட் கூறியதாவது:- இன்று வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. அரசியல் கட்சியினர் சிலர் வேண்டுமென்றே வன்முறையை தூண்டி விடுகின்றனர். அவ்வாறு தூண்டி விட்டவர்களால்தான் இந்த வன்முறை நேரிட்டது. அவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும் என்று ராகேஷ் டிக்கிட் தெரிவித்தார். இந்த கருத்தைதான் டெல்லியில் போராடி வரும் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.

English summary
The farmers said they had nothing to do with the Delhi violence. They also accused some political parties of deliberately inciting violence
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X