டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேச்சுவார்த்தைக்கு ரெடிதான்...ஆனா ஒரு கண்டிஷன் ... அதிரடி காட்டும் விவசாயிகள்!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசுடன் பேச்சுவர்த்தைக்கு தயாராக உள்ளதாகவும், ஆனால் திறந்த மனதுடன் எங்கள் கோரிக்கையை ஏற்கும் விதமாக பேச்சுவர்த்தைக்கு வர வேண்டும் என டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த சட்டத்தை திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

Farmers said waiting for Centre to talks

மத்திய அரசின் வேளாண்சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.விவசாயிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இதில் எதுவும் முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்ப பெற மறுப்பதுடன், ஆக்கப்பூர்வமாக ஏதும் பேசவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் ஹரியானா-டெல்லி எல்லையான சிங்கு பகுதியில் போராடிய விவசாயிகள் நிருபர்களிடம் பேட்டியளித்தனர்.

வயலில் இறங்கி... நலம் விசாரித்து... விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த அன்பில் மகேஷ்..!வயலில் இறங்கி... நலம் விசாரித்து... விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த அன்பில் மகேஷ்..!

அப்போது வேளாண் சங்கத் தலைவர் யோகேந்திர யாதவ் கூறுகையில், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். ஆனால் பேச்சுவார்த்தைக்கு வரும் முன், மத்திய அரசு திறந்த மனதுடன் வரவேண்டும்.வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஒளிவு மறைவு இல்லாமல் பேச வேண்டும். இந்த சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்க்கிறோம்..

இதை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். அதே நேரம் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் எழுத்துப்பூர்வமான உறுதியுடன் அரசு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றார்.இதேபோல் மற்றொரு விவசாய சங்க தலைவர் கூறுகையில், மத்திய அரசு தனது பிடிவாதத்தை விட்டு கீழிறங்கி வந்து, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்" என்று கூறினார்.

English summary
The struggling farmers in Delhi said that they are ready for talks with the Central Government but should come to the talks with an open mind and accept our demand
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X