டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆவேசமாகும் மத்திய அரசு.. சொன்னதை கேட்காவிட்டால்.. விவசாயிகளுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை.. கறார்!

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு மேற்கொண்ட 11-வது சுற்று பேச்சு வார்த்தையும் இன்று தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து, மத்திய அரசு தனது நிலையில் உறுதி காட்ட ஆரம்பித்துள்ளது. தாங்கள் ஏற்கனவே சொன்ன பரிந்துரையை ஏற்றால் தான் இனிமேல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

11வது சுற்று பேச்சுவார்த்தை

11வது சுற்று பேச்சுவார்த்தை

இதுவரை மத்திய அரசுடன் 10 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பங்கேற்றார். வெறும் 18 நிமிடங்கள் மட்டுமே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், பிறகு பெரும்பாலான நேரங்களில் விவசாயிகள் தனி அறைகளில் தான் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 மாதங்கள் தளர்வு

18 மாதங்கள் தளர்வு

18 மாதங்கள் 3 சட்டங்களையும் கிடப்பில் போட தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் மொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என்பது விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கையாக இருக்கிறது. இன்றைய தினம் நடைபெற்ற ஆலோசனையின் போதும் இதே கோரிக்கையை விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

மத்திய அரசு கோபம்

மத்திய அரசு கோபம்

இதனால் மத்திய அரசு தரப்பு கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. சட்டத்தில் எந்த ஒரு குறைபாடும் இல்லை என்ற போதிலும் கூட விவசாயிகள் கேட்டுக் கொண்டதால் 18 மாதங்கள் கிடப்பில் போட சம்மதம் தெரிவித்தோம். ஆனால் சிறிய அளவுக்கு கூட விவசாயிகள் இறங்கி வரவில்லை. எனவே மத்திய அரசு சொன்ன இந்த விஷயத்தை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் இனிமேல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதியாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

டிராக்டர் பேரணி

டிராக்டர் பேரணி

இந்த விவகாரத்தில் மத்திய அரசு முதல் முறையாக, விவசாயிகளிடம் ஆவேசம் அடைந்து உள்ளது குறிப்பிடத் தக்கது. இதனிடையே இன்றைய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்துள்ளதால், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் நாளன்று டெல்லியில் விவசாயிகள் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Union government wants farmers should accept their proposal before next round of talks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X