டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகள் போராட்டம் 100 வது நாள் : கேஎம்பி ஜிடி சாலையை 5 மணிநேரம் முடக்க திட்டம்

விவசாயிகள் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது. 100 நாளான இன்றைய தினம் மேற்கு புற அதிவேக நெடுஞ்சாலையானகேஎம்பி ஜிடி சாலையில் 5 மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நூறாவது நாளான இன்றைய தினம் கேஎம்பி ஜிடி சாலை எனப்படும் குண்ட்லி - மானேஸர்-பல்வால் அதிவேக விரைவுச்சாலையை இன்று 5 மணி நேரம் முடக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 100 நாட்களாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது.

Farmers to block Western Peripheral Expressway on 100th day of protest

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களின் மூலம் சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில்மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த நவம்பர் மாதம் டிராக்டர்களில் டெல்லியை நோக்கி பயணப்பட்டனர் விவசாயிகள்.

விவசாயிகள் அனைவரும் டெல்லியின் எல்லைப்பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லைகளில் டிராக்டர்களை வீடுகளாக மாற்றி தங்கி சமைத்து சாப்பிட்டு போராடி வருகின்றனர் விவசாயிகள். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும், குளிர், மழை, வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்

டெல்லியில் டிராக்டர் பேரணி, சக்கா ஜாம் என பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர் விவசாயிகள். மத்திய அரசு விவசாயிகளுடன் 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை வீடு திரும்பப் போவதில்லை என்று கூறி போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது.

நூறாவது நாளான இன்றைய தினம் கேஎம்பி ஜிடி சாலை எனப்படும் குண்ட்லி - மானேஸர்-பல்வால் அதிவேக விரைவுச்சாலையை இன்று 5 மணி நேரம் முடக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

English summary
The Samyukta Kisan Morcha (SKM) has announced that farmers will block the Western Peripheral Expressway or Kundli–Manesar–Palwal KMP Expressway on March 6 as their agitation against the farm laws completes 100 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X