டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் சரியாக நடந்தால்.. டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு இப்படி இருக்கும்! மிரளவைக்கும் விவசாயிகள்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் குடியரசு தினத்தன்று நடைபெறும் பிரம்மாண்டமான டிராக்டர் பேரணியில் மாநில வாரியாக டிராக்டர் படைகளை உலகிற்கு காட்டுவோம் என்று கூறியுள்ளனர்.

"எல்லாம் சரியாக நடந்தால், டிராக்டர் அணிவகுப்பின் போது அனைத்து மாநில வாரியாகவும் எங்களின் படையை உலகிற்கு காட்டுவோம் என ஹரியானாவைச் சேர்ந்த பாரதிய கிசான் யூனியன் தலைவர் சவுத்ரி ஜோகிந்தர் காசி ராம் நெய்ன் தெரிவித்தார்.

ஹரியானாவில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று டெல்லி திக்ரி எல்லையில் கூட்டம் நடத்தினர். , அங்கு விவசாய சங்க தலைவர் குர்னம் சிங் சாதுனி, ஹரியானா சயுன்க்ட் கிசான் மோர்ச்சாவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பபட்டனர். கூட்டத்தில் ஹரியானாவைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட வேளாண் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

குடியரசு தினம்

குடியரசு தினம்

விவசாய சங்க தலைவர் குர்னம் சிங் சாதுனி டெல்லி காவல்துறையினரை சந்தித்து குடியரசு தினத்தின் போத டிராக்டர் அணிவகுப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். இதுகுறித்துசாதுனி கூறுகையில், "ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியின் வெளிவட்ட சாலையில் விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பை மேற்கொள்வார்கள் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி,. டிராக்டர் அணிவகுப்புக்காக சாலையை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்றும், குடியரசு தின அணிவகுப்புக்கு இடையூறு விளைவிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை என்றும் அதிகாரிகளுக்கு உறுதியளித்துள்ளோம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து டிராக்டர் அணிவகுப்பில் ஒரு லட்சம் டிராக்டர்கள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறோம்.

அரசின் திட்டம்

அரசின் திட்டம்

விவசாயிகளின் கோரிக்கைகள் தீவிரமானதாக அரசுக்கு தெரியவில்லை . சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவில், அரசியல் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் இப்போதைக்கு பிரச்சினையைத் தவிர்க்க விரும்புகிறார்கள். ஜனவரி 26 ம் தேதி டிராக்டர் அணிவகுப்பைத் தடுக்கும் நோக்கில் இந்த திட்டம் இருக்கலாம் " இவ்வாறு கூறினார்.

உற்சாகம்

உற்சாகம்

கடந்த இரண்டு மாதங்களாக திக்ரி எல்லையில் முகாமிட்டு வரும் விவசாயிகள் பலர், டிராக்டர் அணிவகுப்பில் சேர உற்சாகம் இருக்கிறார்கள். டெல்லியின் எல்லைகள் ஏற்கனவே ஏராளமான விவசாயிகளால் நிரம்பியுள்ளன, அவற்றின் டிராக்டர்கள் ஏற்கனவே உள்ளன. அணிவகுப்புக்கு வரும் டிராக்டர்கள் எங்கு நிறுத்தப்படும் என்று அங்குள்ள விவசாயி ஒருவர் கூறினார்.

முயற்சி

முயற்சி


ஹரியானாவின் சிர்சா மாவட்டத்தில் 239 டிராக்டர்கள், ஜிந்த் மாவட்டத்திலிருந்து 1,000 டிராக்டர்கள் பங்கேற்க உள்ளனர். இது ஹரியானாவின் இரண்டு மாவட்டத்தில் மட்டும் வந்துள்ள தகவல் ஆகும். பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகள் டிராக்டருடன் டெல்லி வர திட்டமிட்டுளளார்கள். இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் இதுவரை உடன்பாடுகள் எட்டப்படவில்லை. தடையை மீறி டெல்லிக்குள் வந்த குடியரசு தின அணிவகுப்பில் பிரச்சனை வந்துவிடுமோ என்று அரசு அஞ்சுகிறது. அதனால் விவசாயிகளை சமாதானம் செய்யும் முயற்சியில் தீவரமாக இறங்கி உள்ளது.

English summary
“If all goes well, we will display tableaux of all states during the tractor parade,” Chaudhary Joginder Ghasi Ram Nain, a Bhartiya Kisan Union leader from Haryana, told
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X