டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்த கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. உலகம் முழுக்க கொண்டு செல்ல 'வெபினார்'

Google Oneindia Tamil News

டெல்லி: உலகளாவிய சமூகத்திடம் இந்திய விவசாயிகள் போராட்டத்தை கொண்டு செல்லும் முயற்சியாக "வெபினார்" நடத்த உள்ளது, விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்).

3 விவசாய சட்டங்களுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னணியில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஒரு வெபினாரை ஏற்பாடு செய்து பன்னாட்டு சமூகத்திற்கு விளக்க உள்ளோம் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

Farmers will do a webinar on protest

போக்குவரத்து மற்றும் தொழிற்சங்கங்கள் வெள்ளிக்கிழமையான இன்று நடத்தும் 'பாரத் பந்த்' க்கும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா தனது ஆதரவை வழங்கியது.

நாட்டின் அனைத்து விவசாயிகளும் "பாரத் பந்த் போராட்டத்தை அமைதியாக ஆதரிக்கவும், பந்தை வெற்றிபெறச் செய்யவும்" சம்யுக்தா கிசான் மோர்ச்சா வேண்டுகோள் விடுத்துள்ளது.

விவசாயிகள் 2020ம் ஆண்டு நவம்பர் முதல் டெல்லியின் எல்லையில் அமர்ந்து போராடி வருகிறார்கள். இப்போது போராட்டத்தை உலகளாவிய அளவில் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

English summary
The Samyukta Kisan Morcha (SKM) on Thursday said it will organise a webinar on the issues behind their opposition to the three farm laws.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X