டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஷ்மீர் சிறையில் உள்ள பரூக் அப்துல்லாவும் பாதுகாப்பு துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்!

Google Oneindia Tamil News

டெல்லி; ஜம்மு காஷ்மீரில் பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லோக்சபா எம்.பி.யும் அம்மாநில முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவும் மத்திய பாதுகாப்பு துறை ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுவில் 23 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் சர்ச்சைக்குரிய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய பிரக்யாசிங் தாக்கூரும் இடம்பெற்றிருக்கிறார்.

Farooq Abdullah also part of parliamentary panel on defence

தேசத்தந்தை மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சேவை தேசபக்தர் என்றும் புகழ்ந்தவர் பிரக்யாசிங் தாக்கூர். அப்படியான நபரை பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுவில் நியமித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அதிருப்தியில் திமுக... காரணம் என்ன?கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அதிருப்தியில் திமுக... காரணம் என்ன?

இந்நிலையில் இதே பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுவில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் லோக்சபா எம்.பி.யுமான பரூக் அப்துல்லாவும் இதில் இடம்பெற்றுள்ளார். பரூக் அப்துல்லா தற்போது பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Loksabha MP Farooq Abdullah who was in Jammu Kashmir Prison also part of parliamentary panel on defence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X