டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த 15 நாளுக்கு பாஸ்டேக் முற்றிலும் இலவசம்.. சூப்பர் சலுகை.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: மின்னணு கட்டண வசூலை மேலும் மேம்படுத்துவதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 29 வரை ஃபாஸ்டேக் முற்றிலும் இலவசம் என மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் நெரிசலை தவிர்ப்பதற்காகவும், விரைவாக சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடந்து செல்வதற்காகவும், முறைகேடுகளை தவிர்க்கவும், ஆன்லைன் கட்டண முறையை ஊக்குவிக்கும் வகையிலும் பாஸ்டேக் முறை நாடு முழுவதும் உள்ள 527 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 15ம் தேதி கொண்டுவரப்பட்டது.

இந்த திட்டப்படி வாகனங்கள் அனைத்தும் பாஸ்டேக்கில் கட்டாயம் சேர வேண்டும். பாஸ்டேக் ஒட்டாத வாகனங்கள் இரு மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அரசு எச்சரித்தது. எனினும் டிசம்பர் 15ம் தேதி இதற்கு இறுதி கெடுவை ஜனவரி 15 ஆக மத்திய அரசு மாற்றியது. அதன்படி பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டு இப்போது நடைமுறையில் உள்ளது.

பாஸ்டேக் பாதை

பாஸ்டேக் பாதை

சுங்கச்சாவடிகளில் 75 சதவீத பாதைகள் பாஸ்டேக் ஒட்டிய வாகனங்களுக்கும், 25 சதவீத பாதைகள் பாஸ்டேக் ஒட்டாத வாகனங்களுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் பல சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறைக்கு மாறாக மக்கள் தயாராக இல்லை.இதையடுத்து பாஸ்டேக் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிப் 15 முதல் சலுகை

பிப் 15 முதல் சலுகை

இதன்படி பிப்ரவரி 15 முதல் 29ஆம் தேதி வரை பாஸ்டேக் பயன்படுத்தினால் ரூ.100 கட்டணம் தள்ளுபடி வழங்கப்படும் என மத்திய அரசு சலுகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சவாடிகளில் பாஸ்டேக் பயன்படுத்தி பயனாளிகள் சென்று டிஜிட்டல் பரிவர்த்தணையில் ஈடுபட வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக , தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வரும் பிப்ரவரி 15 முதல் 29 வரை தேசிய நெடுஞ்சாலை பாஸ்டேக் வாங்கும் கட்டணமான ரூ .100யை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது" என கூறப்பட்டுள்ளது.

எப்படி வாங்குவது

எப்படி வாங்குவது

வாகன ஓட்டிகள் எந்தவொரு சுங்கச்சாவடியிலும் , தங்கள் வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி புக்) கொண்டு சென்று பாஸ்டேக்கை இலவசமாகப் பெறலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள், பிராந்திய போக்குவரத்து அலுவலகங்கள், பொதுவான சேவை மையங்கள், போக்குவரத்து மையங்கள் மற்றும் பெட்ரோல் பம்புகள் போன்றவற்றிலிருந்தும் FASTags வாங்க முடியும்.

1033 ஹெல்ப்லைன்

1033 ஹெல்ப்லைன்

நீங்கள் உங்கள் அருகிலுள்ள NHAI FASTag புள்ளி-விற்பனை இடங்களைத் தேட, ஒருவர் MyFASTag பயன்பாட்டைப் பதிவிறக்கலாம் அல்லது www.ihmcl.com ஐப் பார்த்து அறிந்து கொண்டு வாங்கலாம். அல்லது 1033 NH ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம்" என்று மத்திய அரசின் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
FASTag to be available free of charge between February 15 and 29, 2020 . NHAI FASTags can be purchased from all national highway fee plazas, regional transport offices, common service centres, transport hubs, and petrol pumps,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X