டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி- காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோவிலுக்கான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch: HM Amit Shah flags off Delhi-Katra Vande Bharat Express

    டெல்லி: ஜம்மு காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு டெல்லியில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார்.

    டெல்லியில் இருந்து காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லக் கூடிய கத்ரா ரயில் நிலையம் வரைக்குமான ரயில் சேவை வரும் 5-ந் தேதி முதல் தொடங்குகிறது. ரயில் எண் 18 என அழைக்கப்படும் இந்த ரயில் சேவையை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார்.

    Features on Vande Bharat Express Train Service

    அப்போது பேசிய அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கான நவராத்திரி பரிசு இது; இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட (மேக் இன் இந்தியா) ரயில் என குறிப்பிட்டார்.

    டெல்லியில் இருந்து கத்ராவுக்கு 12 மணிநேரம் ரயில் பயண நேரமாக இருந்து வந்தது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 மணிநேரம் மட்டுமே பயண நேரமாக இருக்கும்.

    சீனாவில் ஊழல்.. மேயர் வீட்டின் பாதாள அறையில் இருந்து 13 டன் தங்கம்.. ரூ. 233 கோடி பறிமுதல்சீனாவில் ஊழல்.. மேயர் வீட்டின் பாதாள அறையில் இருந்து 13 டன் தங்கம்.. ரூ. 233 கோடி பறிமுதல்

    இந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் 16 பெட்டிகளும் குளிர்சாதன் வசதியுடன் கூடிய சொகுசு பெட்டிகளாகும். இந்த ரயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு என தனியான கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு பெட்டியிலும் அடுத்த நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகள் எல்இடி திரைகளில் ஒளிரும். ரயிலின் வேகம் உள்ளிட்ட விவரங்களும் இதில் இடம்பெறும். சிசிடிவி கேமராக்கள் மற்றும் பயண அறிவித்தலுக்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.

    இந்த ரயிலில் அபாயசங்கிலிகள் பொருத்தப்பட்டிருக்கவில்லை. இதற்கு மாற்றாக பட்டன்களை அழுத்தி உதவி கோரலாம். கல்வீச்சு சம்பவங்களில் ரயிலின் கண்ணாடிகள் சேதமடையாத வகையில் சிறப்பு அம்சங்கள் அதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய ரயில் சேவைகள் பெங்களூரு- ஹைதராபாத், மும்பை- அகமதாபாத், கொல்கத்தா- பாட்னா இடையே விரைவில் இயக்கப்பட உள்ளன.

    முன்னதாக முதலாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்திருந்தார்.

    English summary
    Vande Bharat Express will bring down the travel time between Delhi and Katra, Jammu Kashmir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X