• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ரொனால்டோ.. கோக கோலா பாட்டில்னுதான ஈஸியா எடுத்துட்டீங்க.. எங்க கிட்ட முடியாது.. பெவிக்கால் வேற லெவல்

Google Oneindia Tamil News

டெல்லி: கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோக கோலா பாட்டில்களை தூர வைத்து விட்டு தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்தாலும் எடுத்தார், கடந்த சில நாட்களாக உலகம் முழுக்க இது பற்றிய பேச்சுத்தான்.

  CRISTIANO RONALDO-வை கலாய்த்த Indian Fielding Coach R.Sridhar

  ரொனால்டோ ஏற்படுத்திய தாக்கம் அப்படி.

  ஆபாச வீடியோ மூலம் மாதம் 7 லட்சம் வருமானம்.. 2 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை குவித்த பப்ஜி மதன்! ஆபாச வீடியோ மூலம் மாதம் 7 லட்சம் வருமானம்.. 2 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை குவித்த பப்ஜி மதன்!

  பிரஸ் மீட்டில் பங்கேற்றபோது ரொனால்டோ எதேர்ச்சையாக இவ்வாறு செய்து, மறைமுகமாக, கூல் டிரிங்க்சுகள் உடலுக்கு நல்லதில்லை, பச்ச தண்ணீரே பலன் தரும் என சொன்னதாலோ என்னவோ, பிரஸ் மீட் முடியும் முன்பாக, கோக கோலா கம்பெனி பங்குகள், பங்குச் சந்தைகளில் 56.10 டாலரிலிருந்து 55.22 டாலராக சரிந்து விட்டது.

  மீம்கள் பறக்கிறது

  மீம்கள் பறக்கிறது

  இதனால்தான் ரொனால்டோ செயலை வைத்து மீம்கள் கொடி கட்டி பறக்கத் தொடங்கியுள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இந்த சம்பவத்தோடு இணைத்து தங்கள் கற்பனைத் திறமையை காட்டி வருகிறார்கள். இதில் பெவிக்கால் வித்தியாசமாக ஒரு மீம் போட்டு பலரையும் "வாவ்" சொல்ல வைத்துள்ளது. 21 ஆயிரம் லைக்குகளை தாண்டிவிட்டது இந்த மீம் டுவிட்டரில்.

  கோக கோலா இடத்தில் பெவிக்கால்

  கோக கோலா இடத்தில் பெவிக்கால்

  கோக கோலா இருந்த இடத்தில் தங்களது பெவிக்கால் பாட்டில் 2 இருந்திருந்தால், அதை நகர்த்தியிருக்க முடியாது, எங்களது மதிப்பும் குறைந்திருக்காது என்று ஹிந்தியை ஆங்கிலத்தில் டைப் செய்து போட்டுள்ளனர் பெவிக்கால் கம்பெனியினர். பெவிக்கால் டப்பாவில் வைத்த தீவனம் சாப்பிட்ட கோழி போட்ட முட்டையை கடைக்காரர் உடைத்தால் பந்து போல தெறித்துதான் ஓடும் என்று விளம்பரம் ஒளிபரப்பியவர்கள்தானே இவர்கள். அதே மாதிரி பாணியை ரொனால்டோ விஷயத்திலும் கையில் எடுத்துள்ளனர்.

  தூண்டில் போட்டு

  தூண்டில் போட்டு

  இப்படித்தான் தூண்டில் போட்டு ஒரு செல்வந்தர் மீன் பிடிக்க காத்திருந்தால், ஒரு சாமானிய நபர், இரும்பு கம்பியில் பெவிக்காலை ஒட்டி வைத்து தண்ணீருக்குள் விட்டு மீனை மொத்தமாக பிடிப்பதாக விளம்பரம் ஒளிபரப்பி புகழ் பெற்றது இதே நிறுவனத்தின் கிரியேட்டிவ் குழுதான்.

  ரொனோல்டோ

  ரொனோல்டோ

  ரொனோல்டோ விஷயத்தை தங்களது விளம்பரத்திற்கு பெவிக்கால் பயன்படுத்தியதற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விளம்பர டீமுக்கு வாழ்த்துக்கள். பிஸினஸ் செய்வதில் நீங்கள் பெஸ்ட் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

  மார்க்கெட்டிங்

  மார்க்கெட்டிங்

  ஹர்ஷ் கோயங்கா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், காலம் என்பது ஒரு மாயை. டைமிங் என்பது ஒரு கலை. புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங் பெவிக்கால் டீமால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பாராட்டியுள்ளார்.

  English summary
  Footballer Cristiano Ronaldo took away 2 bottles of Coca Cola and picked up a bottle of water, which has been the talk of the world for the past few days. Fevicol's ad features two bottles of its popular adhesive Photoshopped onto the press conference table.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X