டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கறிஞர்களே சதி? பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட பலர் மீது பகீர் வழக்கு!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகாருக்கு பின் சில வழக்கறிஞர்களின் சதி இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தலைமை நீதிபதிக்கு வழக்கு... உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு

    டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகாருக்கு பின் சில வழக்கறிஞர்களின் சதி இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கில் நாளுக்கு நாள் நிறைய திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. எப்போது யார் என்ன வழக்கு தொடுக்க போகிறார் என்பது பெரிய புதிராக இருக்கிறது.

    Few lawyers are playing against CJI in harassment case: M L Sharma files a petition

    கடந்த சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயதாகும் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். ஜூனியர் பணியாளராக உச்சநீதிமன்றத்தில் இவர் பணியாற்றி வந்தவர். ஆனால் இதை தலைமை நீதிபதி மறுத்து இருந்தார். இது தற்போது நீதிமன்ற உள் விசாரணையாக நடந்து வருகிறது.

    ஒன்றரை நிமிடத்துக்குள் விசாரணை.. சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி ஒன்றரை நிமிடத்துக்குள் விசாரணை.. சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி

    அதே சமயம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான பாலியல் புகார் சுமத்தினால் ரூ.1.5 கோடி தருவதாக சிலர் தன்னை அணுகியதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரிக்க தனியாக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏகே பட்நாயக் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த குழு இந்த விசாரணையை இன்னும் தொடங்கவில்லை. இந்த இரண்டு வழக்குகளுக்கு இடையில் தற்போது மூன்றாவதாக இன்னொரு வழக்கு போடப்பட்டு இருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகாருக்கு பின் சில வழக்கறிஞர்களின் சதி இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த வழக்கை எம்எல் சர்மா தொடுத்துள்ளார். இவர் தொடர்ச்சியாக சர்ச்சையான வழக்குகளை போடுவதில் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முக்கிய வழக்கறிஞர்கள் மீது குற்றஞ்சாட்டி உள்ளார்.

    வழக்கறிஞர்கள் பிரஷாந்த் பூஷன், காமினி ஜெய்ஷ்வால், இந்திரா ஜெய்சிங், விரிந்தா குரோபர், சாந்தி பூஷன், நினா குப்தா, துஷ்யந்த் துபே ஆகியோர் மீது வழக்கு தொடுத்துள்ளார். இவர்கள்தான் ரஞ்சன் கோகாய்க்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று எம்எல் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கில் எம்எல் சர்மா சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி போட்பே தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

    English summary
    Few lawyers are playing against CJI in harassment case: M L Sharma files a petition in SC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X