டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்த செயற்கைகோள்.. யார் அனுப்பிய செயற்கைகோள்.. விடைகிடைக்காத கேள்விகள்.. பதில் சொல்லுங்க சார்!

மிஷன் சக்தி திட்டம் மூலம் விண்வெளியில் இந்தியா தாக்கி அழித்த செயற்கைகோள் யாருடைய செயற்கைகோள் என்ற பெரிய கேள்வி எழுந்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Mission Shakthi: இந்தியா அழித்தது எந்த செயற்கைகோள்.. விடை தெரியா கேள்விகள்- வீடியோ

    டெல்லி: மிஷன் சக்தி திட்டம் மூலம் விண்வெளியில் இந்தியா தாக்கி அழித்த செயற்கைகோள் யாருடைய செயற்கைகோள் என்ற பெரிய கேள்வி எழுந்து இருக்கிறது.

    மிஷன் சக்தி திட்டம் மூலம், விண்வெளியில் குறைந்த உயரத்தில் சென்று கொண்டு இருக்கும் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் ஏ-சாட் விண்வெளி தொழில்நுட்பத்தை இந்தியா பெற்று இருக்கிறது. இதன் மூலம் வானில் உளவு பார்க்கும் செயற்கைகோள்களை இந்தியா எளிதாக தாக்கி அழிக்க முடியும்.

    இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி இன்றுதான் வெளியிட்டார் . நீண்ட நாட்களுக்கு பின் தொலைக்காட்சியில் தோன்றி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    ஆமா.. நிலாவுக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லயே? விண்வெளி வரை பாய்ந்த மிஷன் சக்தி மீம்ஸ்! ஆமா.. நிலாவுக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லயே? விண்வெளி வரை பாய்ந்த மிஷன் சக்தி மீம்ஸ்!

    என்ன கூறினார்

    என்ன கூறினார்

    அதன்படி இந்தியாவின் ஏ-சாட் ஏவுகணை 300 கிமீ தூரத்தில் இருந்த செயற்கைக்கோளை தாக்கி அழித்து இருக்கிறது. இந்த மொத்த செயல்பாடும் வெறும் 3 நிமிடத்தில் செய்யப்பட்டு உள்ளது. பூமியில் இருந்து சென்ற ஏவுகணை மூலம் இந்த செயற்கைகோள் தாக்கி அழிக்கப்பட்டது.

    பெரிய பெருமை

    பெரிய பெருமை

    இந்தியாவிற்கு இது பெரிய பெருமை. இந்தியா உலகில் இதன் மூலம் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் நாடுகளின் பட்டியலில் நான்காம் இடம் பெற்று உள்ளது. இந்தியாவின் விண்வெளி பாதுகாப்பு இதன் மூலம் உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    அதே சமயம் இதன் மூலம் சர்வதேச விண்வெளி விதிகள் எதுவும் மீறப்படவில்லை. இந்தியா வேறு நாடுகள் எதன் மீதும் தாக்குதல் நடத்தவில்லை. எந்த நாட்டின் செயற்கைக்கோளும் இதன் மூலம் சேதம் ஆகவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    பதில் இல்லை

    பதில் இல்லை

    ஆனால் இன்னும் இதில் பதில் வராத கேள்வி ஒன்று இருக்கிறது. ஏ-சாட் ஏவுகணை தாக்கி அழித்தது எந்த செயற்கைகோள். அந்த செயற்கைகோள் யாருடையது. யாருடைய செயற்கைகோள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று எந்த விதமான ஆதாரங்களையும் பிரதமர் மோடி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Few questions went still un-answered in PM Modi 's Mission Shakthi announcement today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X