டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடுரோட்டில் பாம்புக்கும் கீரிக்கும் செம ஃபைட்.. அச்சத்துடன் வாகன ஓட்டிகள்- வைரல் புகைப்படம்

Google Oneindia Tamil News

டெல்லி: நடுரோட்டில் பாம்புக்கும் கீரிக்கும் இடையே நடக்கும் பயங்கர சண்டை ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இதை வாகனஓட்டிகளும் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அச்சத்துடன் பார்த்தனர்.

Recommended Video

    நடுரோட்டில் பாம்புக்கும் கீரிக்கும் செம ஃபைட்.. அச்சத்துடன் வாகன ஓட்டிகள் - வீடியோ

    பாம்பும் கீரியும் ஒன்றுக்கு ஒன்று எதிரிகள். இது போல் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு இனங்களில் எதிரிகள் உண்டு. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் அந்த பாம்புக்கு கீரி மீது பயம்.

    அது போல் கழுகு மீதும் அதற்கு பயம். இதை மையமாக வைத்துதான் "பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது.. கருடா சவுக்கியமா" என்ற பாடல் உருவானது. அதாவது அது அது இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் ஒரு பிரச்சினையும் இருக்காது என்பதுதான்.

    டாக்டர் வந்தார்.. ஊசி போட்டார்.. காசு வாங்காம போய்ட்டார்.. அவரு யாருனு 90ஸ் கிட்ஸ்க்கு தான் தெரியும்டாக்டர் வந்தார்.. ஊசி போட்டார்.. காசு வாங்காம போய்ட்டார்.. அவரு யாருனு 90ஸ் கிட்ஸ்க்கு தான் தெரியும்

    முக்கியம்

    முக்கியம்

    வீடுகளில் எப்படி வசிப்பிடத்திற்காகவும், இத்தூண்டு வழிக்காகவும் அக்கம்பக்கத்தாரிடம் அடித்துக் கொள்கிறோமோ அப்படிதான் வனப்பகுதிகளில் உள்ள மிருகங்கள், ஊர்வன உள்ளிட்டவை அந்த இடத்தில் வாழ்வதற்கு தகுதியாக இருக்க வேண்டும் என்றால் எதிரிகளை தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.

    கீரி

    கீரி

    அது போல் கீரியும், பாம்பும் ஒரே வனத்தில் வசிக்க வேண்டும் என்றால் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு வெற்றி பெற வேண்டும். அதுபோல் ஒரு காட்சிதான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனத்துறை அதிகாரி அப்துல் குவாம் வனத்தையொட்டியுள்ள சாலையில் பாம்பும் கீரியும் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    பாம்பு, கீரி

    பாம்பு, கீரி

    அந்த வீடியோவில் சாலையில் ஒரு பாம்பும் கீரியும் ஒன்றை ஒன்று அடித்துக் கொள்கின்றன. இதை கடந்து போக முடியாமல் வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்க்கிறார்கள். முதலில் சண்டையிட்டு கொள்ளும் இரண்டும் ஒவ்வொரு திசையில் திரும்பி செல்கின்றன. எனினும் புதருக்குள் தப்ப முயலும் பாம்பை, கீரிப்பிள்ளை அட்டாக் செய்கிறது. அப்போது எப்படியாவது தப்பிக்க பாம்பு போராடுகிறது.

    மூடப்பட்ட பாறாங்கற்கள்

    மூடப்பட்ட பாறாங்கற்கள்

    ஒரு கட்டத்தில் சாக்கடைகள் மூடப்பட்ட பாறாங்கற்களுக்கு இடையில் இருக்கும் ஓட்டைகளில் விழுந்து பாம்பு தப்ப முயல்கிறது. ஆனால் கீரி விடாமல் அப்படியே கடித்து கொன்று அதன் தலையுடன் வாயில் கடித்தவாறே அதன் இருப்பிடத்திற்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறது. இந்த பயங்கர சண்டையில் இறுதியில் கீரிதான் வெற்றி பெற்றது என்பது அனைவருக்கும் வீடியோவை பார்த்தாலே தெரியும்.

    ட்விட்டர்

    ட்விட்டர்

    இதுகுறித்து அந்த வனத்துறை அதிகாரி தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் இது முற்றிலும் இயற்கையானது. இந்த சண்டையில் எந்த ஒரு உயிரினத்தையும் காப்பாற்ற அங்கிருந்த வாகன ஓட்டிகள் முன்வரவில்லை என்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். உயிர் வாழ்வதற்கு யார் தகுதியானவர் என்று நடந்த இந்த சண்டை இயற்கையானது என கூறியுள்ளார்.

    English summary
    An IFS officer shared a video that a snake and mongoose battle goes viral in social medias.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X