டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பார்க்கிங்கில் பிரச்சினை.. டெல்லி நீதிமன்றத்தில் வக்கீல்கள்-போலீஸ் கடும் மோதல்.. வாகனம் தீக்கிரை

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில், திஸ் ஹசாரி நீதிமன்றத்திற்கு வெளியே, காவல்துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே இன்று மாலை பயங்கர மோதல் வெடித்தது. இதில் போலீசாரின் வாகனங்கள் எரிக்கப்பட்டதால், அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

சண்டையின் போது துப்பாக்கியால் சுடப்படும் சத்தமும் கேட்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஒரு வழக்கறிஞர் காயமடைந்தார். அவர் செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Fight broken out between Delhi Police and lawyers at Tis Hazari court

பார்க்கிங் பிரச்சினை தொடர்பாக சில வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறை ஊழியர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இது மோதலாக மாறியது என்கிறார்கள் சிலர். இருப்பினும், மோதல் வெடிக்க சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோதலின்போது காவல்துறையின் ஒரு வாகனம் தீ வைக்கப்பட்டது.

திஸ் ஹசாரி நீதிமன்ற, பார் அசோசியேஷனின் அலுவலக பொறுப்பாளர் ஜெய் பிஸ்வால், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "நீதிமன்றத்திற்கு வருகையில் ஒரு வழக்கறிஞரின் வாகனத்தில் போலீஸ் வாகனம் மோதியது. வழக்கறிஞர் அவர்களை தட்டி கேட்டபோது, ​​அவர் கேலி செய்யப்பட்டார், மேலும் 6 போலீசார், அவரை அழைத்துச் சென்று அடித்து, உதைத்தனர். சில மக்கள் இதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். "

"தகவல் அறிந்து உள்ளூர் காவல்துறையினர் வந்தார்கள், ஆனால் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் உயர்நீதிமன்றத்திற்கு இதுபற்றி, தகவல் கொடுத்தோம், ஆறு நீதிபதிகளுடன் ஒரு குழு அங்கு அனுப்பப்பட்டது, ஆனால் அவர்கள் கூட உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை." என்று ஜெய் பிஸ்வால் கூறினார்.

இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வக்கீல்கள் கூறியதை டெல்லி காவல்துறை மறுத்துள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர டெல்லி காவல்துறை அப்பகுதியில் கூடுதல் போலீசாரை நிறுத்தியுள்ளது. இந்த மோதலின் போது, ​​உ.பி. காவல்துறையின் காவலில் இருந்த ஒரு குற்றவாளி தப்பித்து ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 குண்டர் சட்டம் போட்டது போலீஸ்.. ரத்து செய்தது கோர்ட்.. நாங்கள் ஒன்றும் செய்யவில்லை.. ஜெயக்குமார் குண்டர் சட்டம் போட்டது போலீஸ்.. ரத்து செய்தது கோர்ட்.. நாங்கள் ஒன்றும் செய்யவில்லை.. ஜெயக்குமார்

English summary
Delhi: A scuffle has broken out between Delhi Police and lawyers at Tis Hazari court. One lawyer injured and admitted to hospital. A vehicle has been set ablaze at the premises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X