டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பலாத்காரம் செஞ்சுட்டு அட்வைஸ் பெண்களுக்கா? ஆர்.எஸ்.எஸ்.-ன் ஆணாதிக்க சிந்தனை... ராகுல் செம பாய்ச்சல்

Google Oneindia Tamil News

டெல்லி: பலாத்கார சம்பவங்களைத் தடுக்க பெண்களுக்குதான் அறிவுரை சொல்ல வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். சுரேந்திர சிங்கின் கருத்து அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ்.ன் ஆணாதிக்க் சிந்தனைப் போக்குதான் எனவும் பாய்ந்துள்ளார் ராகுல் காந்தி.

தேசத்தையே குலைநடுங்க வைத்திருக்கிறது உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் பலாத்கார படுகொலை சம்பவம். பாதிக்கப்பட்டவர் தலித் பெண் என்பதற்காக படுகொலையை மூடி மறைக்க அத்தனை நடவடிக்கைகளையும் உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.

Filthy RSS Male Chauvinist Mentality, Rahul Gandhi on BJP MLA Surendra Singh comments

ஹத்ராஸ் பலாத்கார சம்பவம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் இப்படித்தான் கூறியிருக்கிறார். அதாவது, வீட்டில் பெண்களுக்கு நல்ல பண்புகளை சொல்லிக் கொடுங்க.. என்னதான் அரசு நடவடிக்கை எடுத்தாலும் பாலியல் குற்றங்களை எல்லாம் அப்படி தடுத்துவிடவும் முடியாது என பொறுப்பே இல்லாமல் பேசி இருக்கிறார். அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் குவிகின்றன.

ஹத்ராஸ் பலாத்கார சம்பவம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் இப்படித்தான் கூறியிருக்கிறார். அதாவது, வீட்டில் பெண்களுக்கு நல்ல பண்புகளை சொல்லிக் கொடுங்க.. என்னதான் அரசு நடவடிக்கை எடுத்தாலும் பாலியல் குற்றங்களை எல்லாம் அப்படி தடுத்துவிடவும் முடியாது என பொறுப்பே இல்லாமல் பேசி இருக்கிறார். அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டங்கள் குவிகின்றன.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன்... புதிய விவசாய சட்டங்கள் குப்பையில் வீசப்படும்... ராகுல் உறுதி..! காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன்... புதிய விவசாய சட்டங்கள் குப்பையில் வீசப்படும்... ராகுல் உறுதி..!

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். இவர்கள் பலாத்காரம் செய்துவிட்டு பின்னர் பெண்களுக்கே அறிவுரை சொல்வார்களா? இது பாஜகவை வழிநடத்துகிற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஊட்டி வளர்த்திருக்கும் அப்பட்டமான ஆணாதிக்க வெறியின் உச்சம் என கொந்தளித்திருக்கிறார் ராகுல் காந்தி.

English summary
Senior Congress leader Rahul Gandhi slammed that BJP MLA's comments on Uttar Pradesh's Hathras case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X