டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2020- இன் கடைசி சந்திர கிரகணம் இன்று.. 4 மணி நேரம் நீடிப்பு.. இந்தியாவில் தெரியுமா? முழு விவரங்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்த ஆண்டின் இறுதி மற்றும் 4ஆவது சந்திர கிரகணம் இந்தியாவில் இன்று நிகழ்கிறது. இது மதியம் 1 மணி தொடங்கி மாலை 5.22 வரை 4 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கிறது.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகண நிகழ்வாகும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரு நேர் கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும் போது இது நிகழ்கிறது. பூமியின் வெளிப்புற நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழும்போது பெனும்பிரல் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

Final Lunar Eclipse 2020 takes place today

இந்தியாவில் இந்த சந்திரகிரகணம் மதியம் 1.04 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5.22 மணிக்கு முடிவடைகிறது. மாலை 3.15 மணி அளவில் கிரகணம் உச்சத்தில் இருக்கும். இந்த கிரகணம் அடிவானத்திற்கு கீழே இருப்பதால் இந்தியாவில் தெரியாது என வானியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

எனினும் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளான பாட்னா, ராஞ்சி, கொல்கத்தா, லக்னோ, வாரணாசி, புவனேஸ்வர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களால் இந்த கிரகணத்தை காணமுடியும்.

எனவே ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் உள்ளிட்ட பகுதிகளில் தெரியும். முன்னதாக கடந்த ஜனவரி 10, ஜூன் 5 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் 3 சந்திர கிரகணங்கள் நடைபெற்றன.

பாலைவனத்தின் நடுவே மர்ம உலோகத் தூண் திடீர் மாயம்.. ஒருவேளை வச்சதும், எடுத்ததும் அவர்கள்தானோ!பாலைவனத்தின் நடுவே மர்ம உலோகத் தூண் திடீர் மாயம்.. ஒருவேளை வச்சதும், எடுத்ததும் அவர்கள்தானோ!

இன்று நடைபெறுவது 4ஆவது ஆகும். கார்த்திகை மாதத்தில் சுக்ல பட்சத்தில் நடைபெறுகிறது. இதுவரை நடந்த 3 சந்திர கிரகணங்களில் இன்று நடைபெறுவது மட்டுமே நீண்ட நேரம் அதாவது 4 மணி நேரம் நீடிக்கிறது.

சந்திர கிரகணங்கள் மூன்று வகைப்படும். அவை முழு கிரகணம், பகுதி கிரகணம், பெனும்ரல் கிரகணம் ஆகும். ஏற்கெனவே ஏற்பட்ட 3 கிரகணங்களும் பெனும்ரல் வகையை சேர்ந்தவையாகும்.

பெனும்ரல் கிரகணம் என்றால் பூமியால் சூரியன் பகுதி அளவு மறைக்கப்படும். அப்போது நிலவுக்கு சூரிய வெளிச்சம் போய் சேராது. பூமியின் வெளிப்புற நிழல் மட்டுமே நிலவுக்கு செல்லும்.
அதுதான் பெனும்ரல் கிரகணம் ஆகும். இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 14-ஆம் தேதி நிகழ்கிறது.

English summary
Final Lunar Eclipse 2020 takes place today by 1.04 pm and it will be ended at 5.22 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X