டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யெஸ் பேங்க் இந்த நிலைக்கு வர காரணம் காங்கிரஸ் கூட்டணி அரசுதான்.. நிர்மலா சீதாராமன் ஒரே போடு

Google Oneindia Tamil News

டெல்லி: வராக்கடன்களால், யெஸ் வங்கி அவதிப்பட காரணம், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் வழங்கப்பட்ட கடன்கள்தான் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அதிரடி..YES BANK நிர்வாகத்தை கையில் எடுத்தது ஆர்.பி.ஐ

    வராக்கடன் அதிகரிப்பால், தத்தளித்த யெஸ் வங்கியை, ஆர்பிஐ தனது கட்டுப்பாட்டில் எடுப்பதாக நேற்று அறிவித்தது. இந்த நிலையில், டெல்லியில் இன்று மாலை, செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    Finance Minister Nirmala Sitharaman says employment, salary of employees of Yes Bank assured

    2017 முதல், ஆர்பிஐ யெஸ் வங்கியை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வங்கியில் நிர்வாக சிக்கல்கள் மற்றும் பலவீனமான நிலை இருப்பதை அப்போதே கவனித்தது. ரிஸ்க்கான கடன் முடிவுகளை யெஸ் வங்கி எடுத்திருந்தது.

    2018ம் ஆண்டிலேயே, யெஸ் வங்கியை சீர்படுத்தும் பணிகள் துவங்கின. கடந்த வருடம், அந்த வங்கிக்கு, ஆர்பிஐ 1 கோடி அபராதம் விதித்தது.

    யெஸ் பேங்க்-ல் திருப்பதி தேவஸ்தானத்தின் ரூ1,300 கோடி டெபாசிட் தப்பியது! யெஸ் பேங்க்-ல் திருப்பதி தேவஸ்தானத்தின் ரூ1,300 கோடி டெபாசிட் தப்பியது!

    விசாரணை நிறுவனங்களும் யெஸ் வங்கியில் முறைகேடுகளைக் கண்டறிந்தன. ஆபத்தான கடன் முடிவுகள் எடுக்கப்பட்டதை, கண்டறிந்த பின்னர் ரிசர்வ் வங்கி யெஸ் வங்கி நிர்வாகத்தில் மாற்றத்தை வலியுறுத்தியது.

    யெஸ் வங்கியின் நிதி நிலையை, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கண்காணித்து வருகின்றன. யெஸ் வங்கியின் வாடிக்கையாளர் நலனை பாதுகாப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. யெஸ் வங்கியின் ஊழியர்களின் சம்பளம் மற்றும் வேலைக்கு எந்த பிரச்சினையும் குறைந்தது அடுத்த ஓராண்டுக்குள் வராது என அரசு உறுதியளிக்கிறது. டெபாசிட்டுகள், மற்றும் வங்கியின் கடன்களிலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

    2014 க்கு முன்னர்தான் பெரும்பாலான வராக் கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனில் அம்பானி குழுமம், எஸ்எல் குழுமம், DHFL போன்றவற்றிக்கு அப்போதே கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து இன்னும் முழுமையாக கடன் வசூல் ஆகவில்லை. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    English summary
    The exposure of YES Bank to some of the very stressed corporates since before 2014, Anil Ambani Group, SL Group, DHFL etc are some those stressed corporates, says Finance Minister Nirmala Sitharaman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X