டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 பேர் பாதம் தொட்ட பியூஷ் கோயல்.. கையசைத்த மனைவி.. மேஜையை தட்டிய மோடி.. நெகிழ்ச்சி தருணம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Budget 2019: அருண் ஜெட்லிக்கும், பியூஷ் கோயலுக்கும் உள்ள வித்தியாசம்- வீடியோ

    டெல்லி: சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இடைக்கால பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். பாஜக ஆட்சியில் பணவீக்கம் 4.4 சதவீதமாக உள்ளது. இந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் 35 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை குடும்பத்தினருக்கு செலவு அதிகரித்திருக்கும்.

    குறைந்த செல்வில் 143 கோடி எல்இடி விளக்குகள் வழங்கப்பட்டதால் அரசுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டது. 2 ஹெக்டேர் வரை வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

    அந்த உதவித் தொகை தலா ரூ. 2000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவு ஏற்படும். இந்த உதவித்தொகை மூலம் 12 கோடி சிறு, குறு ,நடுத்தர விவசாயிகள் பயன்பெறுவர்.

    கிசான் கார்டுதாரர்களுக்கான வட்டி மானியம் இரட்டிபபாக்கப்படும். பொருளாதார சீர்திருத்தங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன.

    2022-விவசாயிகளின் வருமான இரட்டிப்பாக்கப்படும். மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 32 முதல் 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஹரியானாவில் 22-ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார் பியூஷ் கோயல்.

    கையசைத்த மனைவி

    கையசைத்த மனைவி

    காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 7 நிமிடங்கள் முன்பாக லோக்சபா வந்துவிட்டார் பியூஷ் கோயல். அப்போது கோயலின் மனைவி சீமா கோயல் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் லோக்சபா பார்வையாளர் மாடத்தில் இருந்தபடி அவரை நோக்கி கையசைத்தனர். சில குடும்ப உறுப்பினர்கள், தம்ப்ஸ்அப் செய்து உற்சாகமூட்டினர்.

    கால்களில் விழுந்து ஆசி

    கால்களில் விழுந்து ஆசி

    அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்ட, பியூஷ் கோயல், அவைக்குள் இருந்த மூத்த அமைச்சர்களான நிதின் கட்கரி மற்றும் உமா பாரதி ஆகியோர் கால்களில் விழுந்து ஆசி பெற்றார். இதன்பிறகு பாஜக சீனியர் சாந்த குமார் கால்களிலும் விழுந்து ஆசி பெற்றது மாடத்தில் அமர்ந்திருந்தவர்கள் கவனத்தை ஈர்த்தது.

    அருண் ஜேட்லி, பியூஷ் கோயல் ஒப்பீடு

    அருண் ஜேட்லி, பியூஷ் கோயல் ஒப்பீடு

    மத்திய பட்ஜெட்டில் அருண் ஜேட்லி நிதி அமைச்சராக தாக்கல் செய்த பட்ஜெட்டுகளைவிட மிக அதிக சலுகைகள் இடம் பெற்றிருந்தன. எனவே பியூஷ் கோயலுக்கு பல மட்டங்களில் இருந்து பாராட்டுகள் குவிகின்றன. பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பிரதமர் நரேந்திர மோடியும், பியூஷ் கோயலின் முதுகில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார். ஒரு வழக்கறிஞருக்கும் (அருண் ஜேட்லி) ஒரு சி.ஏவுக்குமான (பியூஷ் கோயல்) வித்தியாசம் என்ன என்பதை இந்த பட்ஜெட்டை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.

    மேஜையை தட்டிய மோடி

    மேஜையை தட்டிய மோடி

    அதேநேரம், அருண் ஜெட்லி அவையில் இல்லாதது, வருத்தம் அளிப்பதாக தனது உரையின் ஆரம்பத்திலேயே பியூஷ் கோயல் தெரிவித்துவிட்டுதான் உரையை தொடங்கினார். பியூஷ் கோயல் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டபோது, பிற ஆளும் கட்சி எம்பிக்களை போல, பிரதமர் நரேந்திர மோடியும், மேஜையை தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது.

    English summary
    The finance minister piyush goyal, who entered the House around five to seven minutes before the proceedings began, touched the feet of Cabinet colleagues Nitin Gadkari and Uma Bharti, and BJP veteran Shanta Kumar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X