டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு- தமிழகத்துக்கு ரூ1,928 கோடி- உ.பி, ம.பி., பீகாருக்கு ரூ16,517‬ கோடி

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்துக்கு மே மாத பங்கீட்டுத் தொகையாக ரூ1,928 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ 8,255.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.

கொரோனா லாக்டவுன் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றார்.

 Finance Ministry sanctions May instalment of Devolution of States Share

இந்த கூட்டங்களில் மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் மத்திய அரசு வரிகள், தீர்வைகளில் மாநிலங்களுக்கான பகிர்வுத் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா - மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 987தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா - மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 987

மாநிலங்களுக்கு மொத்தம் ரூ46,038.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது நிதித்துறை அமைச்சகம். இதில் தமிழகத்துக்கு ரூ1,928 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள்

நிதி ஒதுக்கீடு

(ரூ.கோடியில்)

ஆந்திரா 1892. 64
அருணாச்சல் 810.28
அஸ்ஸாம் 1441.48
பீகார் 4631.96
சத்தீஸ்கர் 1573.60
கோவா 177.72
குஜராத் 1564.40
ஹரியானா 498.15
ஹிமாச்சல் 367.84
ஜார்க்கண்ட் 1525.27
கர்நாடகா 1678.57
கேரளா 894.53
ம.பி 3630.56
மகாராஷ்டிரா 2824.47
மணிப்பூர் 330.56
மேகாலயா 352.20
மிசோரம் 232.96
நாகாலாந்து 263.80
ஒடிஷா 2131.13
பஞ்சாப் 823.16
ராஜஸ்தான் 2752.65
சிக்கிம் 178.64
தமிழகம் 1928.56
தெலுங்கானா 982.00
திரிபுரா 326.42
உ.பி. 8255.19
உத்தர்காண்ட் 508.27
மேற்கு வங்கம் 3461.65

English summary
Union Finance Ministry has issued sanction orders for Rs 46,038.70 cr today for the May instalment of Devolution of States’ Share in Central Taxes & Duties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X