டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அபேஸ்.. 3.3 லட்சம் இந்தியர்களின் வங்கி கணக்கு விபரங்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: ஏறக்குறைய 3.3 லட்சம் இந்தியர்களின் வங்கி கணக்கு விபரங்கள், கேஒய்சி ஆவணங்கள் உள்ளிட்ட நிதி விபரங்கள் திருடப்பட்டு உள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கி கணக்குகள், கேஒய்சி ஆவணங்கள் உள்ளிட்ட நிதி ஆவணங்களை ஹேக்கர்கள் குழு திருடி உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை தனியார் சைபர் பாதுகாப்பு ஆயு்வாளர் ராஜ்சேகர் ராஜாஹரியா தெரிவித்துள்ளார்.

கிரிப்டோகரென்சி பரிமாற்ற நிறுவனம், பையூகாயின் போன்ற நிறுவனங்களின் விதிமீறலால் இந்த தகவல் திருட்டு நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதனை பையூகாயின் நிறுவனம் மறுத்துள்ளது.

அதே சமயம் இந்த தகவல் திருட்டிற்கு பின்னாடி Juspay என்ற நிறுவனம் தான் உள்ளது என ShinyHunters என்ற ஹேக்கர்கள் குழு தெரிவித்துள்ளது. 6 ஜிபி திறன் கொண்ட அளவிலான இந்தியர்களின் நிதி தொடர்பான தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட தகவல்களின் ஸ்கிரீன்ஷாட்டையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

திருடப்பட்ட இந்த தகவல்களில் பயனாளர் பெயர், தொலைப்பேசி எண், பான் எண், இமெயில் முகவரி, ஐஎப்எஸ்சி கேட் உள்ளிட்ட அவரின் வங்கி விபரங்கள், எந்த வகையான வங்கி கணக்கு என்பன உள்ளிட்ட விபரங்களும் அடங்கி உள்ளவன.

 Financial information of 3.3 lakh Indians put on dark web

கிரிப்டோகரென்சியை வாங்குவதற்காக இந்த தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்களை பயன்படுத்தி ஹேக்கர்கள் குழு கிரிப்டோகரென்சிக்கு பண பரிவர்த்தனை செய்ய வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் 3.5 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

English summary
Financial details, including bank accounts and KYC documents of nearly 3.3 lakh Indian users were allegedly leaked on the dark web bya hacker group.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X