டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மன்னித்து விடுங்கள்... என் உடல் யமுனை நதி பாலத்தில் கிடக்கும் - மகனின் விபரீத முடிவு

எனது உடல் யமுனை ஆற்றுப்பாலத்திற்கு கீழே கிடக்கும் என்று பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பிவிட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளான் ஒரு இளைஞன். டெல்லியில் நடந்த இந்த சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்ச

Google Oneindia Tamil News

Recommended Video

    'என் உடல் யமுனை நதி பாலத்தில் கிடக்கும்' - மகனின் விபரீத முடிவு- வீடியோ

    டெல்லி: அம்மா அப்பா என்னை மன்னித்து விடுங்கள் எனது எனது உடல் யமுனை ஆற்றுப்பாலத்திற்கு கீழே கிடக்கும் என்று பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பிவிட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளான் டெல்லியைச் சேர்ந்த ஒரு இளைஞன்.

    பிள்ளைகள் மேல் நாம் எவ்வளவு தான் பாசத்தை கொட்டி வளர்த்தாலும் பெற்றோர்கள் மேல் இல்லாத அன்பும் பாசமும் தன் நண்பர்கள் மேல் வந்துவிடுகிறது. பெற்றோர்கள் சொன்னால் காது குடுத்து கூட கேட்க மாட்டார்கள் அதே நேரத்தில் நண்பர்கள் சொன்னால் உயிரையும் விடுவார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது.

    Find my body under ITO Bridge WhatsApp message to family


    டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வந்தவர் ஹர்ஸ் கண்டேல் வால். திருமணமான அக்கா மாமா என மகிழ்ச்சியான குடும்பம் அவர்களுடையது. ஹர்ஸ் வீட்டிற்கு ஒரே ஆண் பிள்ளை என்பதால் செல்லம் கொஞ்சம் அதிகம். ஆன்லைன் நிறுவனத்தில் டெலிவரி பாய் வேலை செய்து வந்த ஹர்ஸ் சில தினங்களுக்கு முன்பு ஹர்ஸ் பெற்றோர்களுக்கு ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் வந்துள்ளது.

    அதில் அம்மா அப்பா என்னை மன்னிட்டு விடுங்கள். என் உடல் யமுனை நதியின் பாலத்திற்கு கீழே கிடக்கும் என்று அதில் இருக்கவே அதிர்ச்சியடைந்த பெற்றோர் அலறியடித்துக்கொண்டு அங்கே சென்றனர். ஆனால் அங்கே உடல் இல்லை. உடைகள் மட்டுமே இருந்தன. ஸ்கூட்டர் பர்ஸ் கிடந்துள்ளது. ஹர்ஸ் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் போகவே இந்திரபிஸ்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் விசாரித்த போது இரண்டு நாட்கள் கழித்து ஹர்சின் உடல் குப்பைகளுக்கு நடுவே கிடப்பதாக குப்பை பொறுக்குபவர்கள் தகவல் கூறினர். அங்கே குப்பைகளுக்கு நடுவே இருந்த ஹர்ஸ் சடலத்தை மீட்டனர். ஜூன் 30ஆம் தேதி நண்பனின் மனைவி பிறந்தநாளைக் கொண்டாட முர்த்தால் என்ற பகுதிக்கு நண்பர்களுடன் சென்றார் ஹர்ஸ். ஜூலை 1ஆம் தேதி காலையில் பெற்றோரிடம் பேசிய அவர், திடீரென சில மணிநேரத்தில் அப்படி ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

    ஹர்ஸ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் கூறியுள்ளனர். இதனையடுத்து ஹர்ஸின் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஹர்ஸ் மர்ம மரணம் கொலையா? தற்கொலைதானா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பார்ட்டியில் நடந்தது என்ன என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    A youth delhi allegedly committed suicide after sending a WhatsApp message to his family that read,Please forgive me. My dead body would be under the ITO Bridge.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X