டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்வாணமாக வலம் வந்த 6 கொரோனா நோயாளிகள்.. நர்சுகளிடமும் தொந்தரவு.. தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 6 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: "நிர்வாணமாகவே ஆஸ்பத்திரி வார்டுக்குள் வலம் வருகிறார்கள்.. நர்ஸ்களிடம் அசிங்க அசிங்கமாக சிக்னல் செய்கிறார்கள்.. சிகரெட் கேட்டு தொல்லையும் தருகிறார்கள்" என்று நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டு தற்போது காஸியாபாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 6 பேர் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது!!

Recommended Video

    டெல்லியில் நடைபெற்ற கூட்டம்... பலருக்கு கொரோனா பாதிப்பு... என்ன நடந்தது?

    டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தப்லிக் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மத பிரசங்க மாநாடு நடைபெற்றது.

    இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டுகளை சேர்ந்த இஸ்லாமியர்களும் பங்கேற்றனர்... தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் சென்று வந்தனர்.

    மாநாடு

    மாநாடு

    இந்த மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களில் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய நிலையில் அவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாநாட்டுக்கு சென்ற வந்த 6 பேர் காஸியாபாத் எம்எம்ஜி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    நர்ஸ்கள்

    நர்ஸ்கள்

    தனிமை வார்டில் வைத்து, இவர்களுக்கு நர்ஸ்கள் சிகிச்சை அளித்துவந்தனர். ஆனால் இந்த 6 பேரும் ஆஸ்பத்திரி வார்டுக்குள்ளேயே நிர்வாணமாக சுற்றித்திரிவதாகவும், மிகவும் அநாகரிகமாக நடந்து கொள்வதாக அதிர்ச்சி புகார் ஒன்று எழுந்துள்ளது. இது சம்பந்தமாக ஆஸ்பத்திரி நிர்வாக சார்பில் காவல்துறைக்கு புகார் கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது.

    அசிங்கமான செய்கை

    அசிங்கமான செய்கை

    அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: "கொரோனா தொற்றுடன் காஸியாபாத் மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லிக் ஜமாத் பங்கேற்பாளர்கள் 6 பேரும் ஆடைகளின்றி நிர்வாணமாக வார்டுகளுக்குள் சுற்றித் திரிகின்றனர். மிகவும் மோசமான பாடல்களை கேட்கின்றனர்... பணிபுரியும் நர்ஸ்களிடம் அசிங்கமாகவும் செய்கைகளை காட்டுகின்றனர்.

    வழக்கு பதிவு

    வழக்கு பதிவு

    ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் சிகரெட் கேட்டு தொல்லை செய்கின்றனர்.. நர்ஸ்களை மோசமாக திட்டி உள்ளனர்.. இத்தகையோர்களுக்கு சிகிச்சை தருவது ரொம்பவும் கஷ்டமாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தியதுடன், அவ்வாறு நடந்துகொண்ட 6 பேர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்... மேலும் இவர்கள் 6 பேரையும் வேறு ஆஸ்பத்திரிக்கும் இடமாற்றம் செய்தனர்.

     ஆதித்யநாத் அரசு

    ஆதித்யநாத் அரசு

    இதனிடையே, இந்த நோயாளிகள் மீது அம்மாநில அரசு வழக்கு பதிவு செய்துள்ளது... மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு சட்டத்தை இவர்கள் மீது போட முதல்வர் ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இந்தியாவில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சும் முதல் மாநில அரசு உத்தர பிரதேச அரசுதான்.

     நடவடிக்கை

    நடவடிக்கை

    இது தொடர்பாகவும் ஆதித்யநாத் அளித்த பேட்டியில், "அவர்கள் யாரும் சட்டத்தை மதிக்கவில்லை. அவர்கள் எங்கள் உத்தரவை பின்பற்றவில்லை. அவர்கள் மனித குலத்தின் எதிரிகள். அவர்கள் மீது நாங்கள் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தை போட உத்தரவிட்டுள்ளோம்... அதேபோல் அவர்கள் ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர்களிடம் மோசமாக நடந்து இருக்கிறார்கள்... இதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது . எங்கள் மாநிலத்தில் இதற்கு முன் இப்படி நடந்தது இல்லை. இனியும் இப்படி நடக்க விட மாட்டோம். நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு இவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க போகிறோம்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

    English summary
    fir registered against six tablighi jamaat patients in ghaziabad
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X