டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலில் தீ.. 1500 பேரை காப்பாற்றி உயிர் தியாகம் செய்த அதிகாரி சவுகான்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலில் தீ.. 1500 பேரை காப்பாற்றி உயிர் தியாகம் செய்த அதிகாரி சவுகான்

    டெல்லி: விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு உயர் அதிகாரி பலியானார்.

    கர்நாடகாவின் கார்வார் துறைமுகத்தில் இந்த கப்பல் நுழைந்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கப்பல் ஊழியர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    Fire on INS Vikramaditya, Navy officer dies

    தீயை அணைக்கும் பணியில் முன்னிலையில் நின்றவர் லெட்டினன்ட் கமாண்டர், சவுகான். இன்ஜின் அறைக்குள் துணிச்சலாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த பணியின்போது நெருப்பு மற்றும் புகை காரணமாக மயங்கி விழுந்துள்ளார் சவுகான்.

    இதையடுத்து உடனடியாக அவர் கார்வார் நகரிலுள்ள கடற்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சவுகானை காப்பாற்ற முடியவில்லை. 30 வயதுதான் ஆன சவுகானுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. ஆனால், சுயநலத்தைவிட தேச நலனை பெரிதாக நினைத்து, தீயணைப்பு பணியில் குதித்தார் சவுகான். அந்த கப்பலில் இருந்த சுமார் 1500 பேரை காப்பாற்றி உயிர் தியாகம் செய்துள்ளார் சவுகான்.

    இந்தியாவின் மிகப்பெரிய போர்க் கப்பல்களில் ஒன்றுதான், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா. அதில் ஏற்பட்டுள்ள தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை குழு தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.

    English summary
    "It is with profound grief & regret that we report the sad & untimely demise of Lieutenant Commander DS Chauhan, a young colleague and a brave brother-in-arms, onboard INS Vikramaditya. He laid down his life fighting a fire in a machinery compartment"says Navy on r DS Chauhan dimise.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X