டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே இடத்தில் சுத்திட்டு இருந்தா எப்படி.. ரூட்டை மாத்து.. வெற்றிகரமாக மாற்றப்பட்ட சந்திரயான் 2ன் பாதை

Google Oneindia Tamil News

Recommended Video

    Chandrayaan 2 | சந்திராயன் 2 விண்கலத்துடன் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்!- வீடியோ

    டெல்லி: விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இன்று வெற்றிகரமாக மாற்றி அமைக்கப்பட்டது .

    கடந்த திங்கள் கிழமை மதியம் 2.49 மணிக்கு சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2 பூமியில் இருந்து செலுத்தப்பட்டதில் இருந்து நிலவை அடையும் வரை மொத்தம் 48 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

    தற்போது பூமியை சுற்றிக்கொண்டு இருக்கும் சந்திரயான் 2 இன்னும் 21 நாட்களில் நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கிவிடும்.

    எப்படி சென்றது

    எப்படி சென்றது

    சந்திரயான் 2 செலுத்தப்பட்ட முதல்நாள் பூமியை 170 கிமீ தூரத்தில் இருந்து சுற்ற தொடங்கியது. இது பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. நீள்வட்ட பாதையில் சந்திரயான் 2 சுற்றுவதன் மூலம் அதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். இதனால் நீள்வட்ட பாதையில் சுற்றி சுற்றி பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2 நகர்ந்து தூரமாக செல்லும்.

    15 முறை மாறும்

    15 முறை மாறும்

    மொத்தம் 15 முறை சந்திரயான் 2 இதற்காக திசை மாற்றப்படும். கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு நகர்த்தி செல்லப்படும். இதற்காக அதில் உள்ள எஞ்சின் 15 முறை கொஞ்சம் கொஞ்சமாக இயக்கப்படும். இப்படியாக பூமியைவிட்டு 23 நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2 விலகி செல்லும். ஏற்கனவே இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது.

    இன்று முதல் தடவை

    இன்று முதல் தடவை

    இந்த நிலையில் இன்று சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை மாற்றியமைக்கும் பணி வெற்றிகரமாக செய்யப்பட்டது. பூமியை 170 கிமீ தூரத்தில் இருந்து சுற்றி வந்த சந்திரயான் 2 இன்று சுற்றுவட்டப்பாதையை மாற்றிக் கொண்டது. 170ல் இருந்து 241 கிமீ தூரத்திற்கு சந்திரயான் 2 சுற்றுவட்டப்பாதையை மாற்றிக் கொண்டது.

    இனி என்ன

    இனி என்ன

    இனி இதே போல் மேலும் 14 முறை வரும் நாட்களில் சந்திரயான் 2 சுற்றுவட்டப்பாதையை மாற்றிக் கொள்ளும். அதன்பின் சரியாக 23ம் நாள் அன்று பூமியில் இருந்து சந்திரயான் 2 ஆனது 45000 கிமீ தூரத்திற்கு சென்று இருக்கும். அப்போது அதில் இருக்கும் எஞ்சின் இயக்கப்படும் நிலவை நோக்கி நகர்த்தி செல்லப்படும்.

    எப்போது செல்லும்

    எப்போது செல்லும்

    அதன்பின் மேலும் 25 நாட்களில் சந்திரயான் 2 நிலவை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.சரியாக செப்டம்பர் 6ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை சந்திரயான் 2 அடையும். செப்டம்பர் 7ம் தேதி சரியாக விக்ரம் லேண்டரில் உள்ள பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவில் ஆராய்ச்சிகளை செய்யும்.

    English summary
    First-ever rotational change successfully made in Chandrayaan-2 after launch.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X