டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

11,000 அடி உயர பகுதி.. முறுக்கிய மீசை, குளிருக்கு ஜாக்கெட்.. ராணுவ கூடாரத்தில் அமர்ந்து மோடி ஆலோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் பகுதிக்கு இன்று காலை எந்தவித முன்னறிவிப்புமின்றி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். அது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Recommended Video

    India China Border | Modi in Leh Boost to Soldiers

    இந்த புகைப்படத்தில் குளிருக்கு அணியும் ஜாக்கெட்டுடன், ராணுவ முகாமில் நடுநாயகமாக மோடி அமர்ந்துள்ளதை பார்க்க முடிகிறது.

    லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க கூடிய நிலையில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்கு நேரில் சென்று ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக இருந்தது.

    முன்னறிவிப்பு ஏதும் இல்லை.. திடீரென விமானத்தில் கிளம்பி லடாக் சென்ற மோடி.. பெரும் பரபரப்பு முன்னறிவிப்பு ஏதும் இல்லை.. திடீரென விமானத்தில் கிளம்பி லடாக் சென்ற மோடி.. பெரும் பரபரப்பு

    திடீர் பயணம்

    திடீர் பயணம்

    ஆனால், நேற்று திடீரென அவரது பயணம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக எந்த ஒரு விளக்கமும் அறிவிக்கப்படாத நிலையில் முன்னறிவிப்பு ஏதுமின்றி இன்று காலை விமானத்தின் மூலமாக டெல்லியிலிருந்து லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.

    வீரர்களுடன் சந்திப்பு

    வீரர்களுடன் சந்திப்பு

    அவருடன், ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உடன் சென்றிருந்தார். அங்கு ராணுவ அதிகாரிகளின் கூடாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். மேலும், அடுத்ததாக காயம்பட்ட ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து அவர் தைரியமூட்டுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

    குளிர் ஜாக்கெட்

    குளிர் ஜாக்கெட்

    முறுக்கிய மீசை மற்றும் தாடியுடன் நரேந்திர மோடி காணப்படுகிறார். கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் உள்ளது இந்த பகுதி. கடுமையான குளிர் நிலவும் என்பதால், அவர் உடலுக்கு மேலே குளிரை தடுக்க கூடிய ஜாக்கெட் அணிந்து உள்ளார். ராணுவ முகாமுக்குள் ஆலோசனை நடத்த கூடிய புகைப்படம் வெளியாகி உள்ளது.

    முறுக்கிய மீசை

    முறுக்கிய மீசை

    நடுநாயகமாக அவர் அமர்ந்துள்ளார். சமூக இடைவெளி விட்டு ராணுவ அதிகாரிகள் அமர்ந்துள்ளனர். சமீபத்தில் நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்தும் போது பிரதமர் நரேந்திர மோடியும் முறுக்கிய மீசையுடன் புதிய கெட்டப்பில் காட்சியளித்தார். இப்போதும் அதே போன்றுதான் ராணுவ அதிகாரிகள் மத்தியில் அவர் உரை ஆலோசனை நடத்துவதை பார்க்க முடிகிறது.

    English summary
    First pictures of Prime Minister Narendra Modi, in Leh at a forward location in Nimu with Indian Army and ITBP. Located at 11,000 feet, this is among the tough terrains.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X