டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜூன் 6-ல் 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்குகிறது?

Google Oneindia Tamil News

டெல்லி: புதிதாக தேர்வு செய்யப்பட்ட லோக்சபா எம்.பி.,க்கள் பங்கேற்கும் 17-வது பாராளுமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் ஜூன்-6ந் தேதி துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்யை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. வரும் 30ந் தேதி மோடி பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இந்த நிலையில், பதவி ஏற்பு விழா முடிந்த மறுநாள் மே31ந் தேதி மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது.

First session of 17th Parliament session likely from June 6-15

இந்த கூட்டத்தில் 17-வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. இந்தநிலையில், வரும் ஜூன் 6ந் தேதி முதல் 15ந் தேதி வரையிலான காலத்தில் 6 நாட்களுக்கு (ஆறு அமர்வுகள்) 17-வது பாராளுமன்றத்தில் முதல் கூட்டத்தொடர் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல் நாளன்று பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். அன்றைய தினமே மக்களவைக்கான இடைக்கால அவைத்தலைவரும் அறிவிக்கப்படுவார்.

இடைக்கால அவைத்தலைவர் புதிய எம்.பி.க்களுக்கு பதவி ஏற்பு நடத்தி வைப்பார். இதைத்தொடர்ந்து, புதிய மக்களவை தலைவர் தேர்வு நடைபெறும். பின்னர், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இரு அவைகளிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். இறுதியில் அதன் மீது பிரதமர் மோடி பதில் உரை ஆற்றுவார்.

English summary
According to reports, The 17th Lok Sabha's first parliament session is likely to held from June 6 and go on till June 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X