டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான முதல் ஓட்டு இன்றே பதிவாகியாச்சு.. எங்கே தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான முதல் வாக்குப்பதிவு அருணாச்சலப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

17ஆவது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

First vote for the General Elections 2019 cast in Arunachal Pradesh

ஆனால் ஏப்ரல் 6ஆம் தேதியான, இன்று, இந்தத் தேர்தலுக்கான முதல் வாக்குப்பதிவு அரங்கேறி விட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. ஆனால் இதுதான் யதார்த்த நிலை.

அருணாச்சலப் பிரதேசத்தில்தான் இது லோக்சபா தேர்தலுக்கான முதலாவது வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுள்ளது. இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையைச் சேர்ந்த வீரர் சுதாகர் நடராஜன், தன் தபால் வாக்கை நேற்று, முதலாவதாக பதிவு செய்து அசத்தியுள்ளார்.

எல்லையில் பணிபுரியும் வீரர்களுக்காக அருணாச்சலப் பிரதேசத்தின் லோஹித்பூரில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று வீரர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதுதான் இந்த லோக்சபா தேர்தலின் முதலாவது வாக்குப்பதிவு என கணக்கில் கொள்ளப்படுகிறது.

English summary
First vote of Lok Sabha Polls 2019 has been cast in Arunachal Pradesh by service voters. A remote Indo-Tibetan Border Police (ITBP) unit on the eastern tip of North East started service voting by secret postal ballot on 5/4/19 at Lohitpur, Arunachal Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X