டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் பெண் ரபேல் போர் விமான ஓட்டியாக...வாரணாசியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங் தேர்வு!!

Google Oneindia Tamil News

டெல்லி: வாரணாசியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங் முதல் பெண் ரபேல் போர் விமான ஓட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அம்பாலாவில் இருக்கும் விமானப்படை தளத்தில் விரைவில் ரபேல் படையில் ஷிவாங்கி சிங் சேர இருக்கிறார்.

ராஜஸ்தானில் இருக்கும் விமானப்படை தளத்தில் இருந்து அம்பாலாவுக்கு ஷிவாங்கி வந்து சேர்ந்துள்ளார். விங் லெப்டினன்ட் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் உடன் இவர் ராஜஸ்தானில் செயல்பட்டு வந்தார்.

'தீவிர விசாரணையால்' சுஷாந்த் சிங் பேரு கெட்டுப்போனதுதான் மிச்சம்.. சரியான போதை ஆசாமியாம்.. ரியா ஷாக்'தீவிர விசாரணையால்' சுஷாந்த் சிங் பேரு கெட்டுப்போனதுதான் மிச்சம்.. சரியான போதை ஆசாமியாம்.. ரியா ஷாக்

கோல்டன் ஏரோ

கோல்டன் ஏரோ

கடந்த 2017ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு இருந்த பெண்கள் குழுவில் இடம் பெற்று இருந்தார். ஃபிளைட் லெப்டினன்ட் ஆக ஷிவாங்கி இருக்கிறார். தற்போது ரபேல் விமானம் ஓட்டுவதற்கு இவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அம்பாலாவில் இருக்கும் கோல்டன் ஏரோ என்ற 17வது படையில் சேர இருக்கிறார்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

2017ஆம் ஆண்டில் இருந்து மிக் 21 போர் விமானத்தை இயக்கி வருகிறார். ராஜஸ்தானில் விங் லெப்டினன்ட் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் உடன் செயல்பட்டு வந்தார். கடந்தாண்டு தேர்தலுக்கு முன்பு எல்லையில் பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி, பின்னர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டவர்தான் இந்த அபிநந்தன் வர்த்தமான்.

பள்ளி படிப்பு

பள்ளி படிப்பு

விமானம் ஓட்டவேண்டும் என்று சிறு வயதில் முதலே கனவுடன் இருந்து வந்ததாக ஷிவாங்கி தெரிவித்துள்ளார். வாரணாசியில் இருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பள்ளி படிப்பை முடித்தார்.

பெருமை

பெருமை

இதற்குப் பின்னர், தேசிய சாரணர் படையில் சேர்ந்து பணியாற்றினார். இதன் பின்னர் 2016ல் இந்திய விமானப் படை அகாடமியில் சேர்ந்தார். தற்போது ரபேல் போர் விமானத்தை இயக்க இருக்கும் முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார். பிரதமர் மோடியின் தொகுதியில் இருந்து இவர் வருவது மேலும் கூடுதல் செய்தியாக அமைந்துள்ளது.

English summary
First woman Rafale pilot from Varanasi Flt Lt Shivangi Singh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X